பக்கம்:எழில் உதயம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முக்கரண வழிபாடு 67

விடுவோம். திருவடியோடு தொடர்பு கொள்வதனால்தான் அடியார் என்ற பெயரே உண்டாயிற்று.

来源 :::

முதலில் அன்னையின் திருவடித் தாமரையில் விழுந்து வணங்கி அப்பெருமாட்டியின் மந்திரத்தைத் தியானிக்க வேண்டும். யார் தன்னை மனத்தால் நினைக்கிருர்களோ, அவருடைய பாவத்தை நீக்குவது என்னும் பொருளே உடையது மந்திரம் என்னும் சொல். வாயில்ை மந்திரத்தை வெளிப்படையாகச் சொல்வது மரபன்று. நாவை இயக்கிச் சொன்னலும் புறத்தே புலனுகாமல் சொல்ல வேண்டும்.

"ஆறெழுத் தடக்கிய அருமறைக் கேள்வி

நாவியல் மருங்கின் நவிலப் பாடி’

என்று திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் சொல்கிரு.ர்.

மந்திரங்களை மூன்று வகையாக ஜபிக்கலாம். வெளிப் படையாகப் பிறர் காதில் விழும்படி சொல்வதை வாசிகம் என்பர். மந்திரத்தின் முழு வடிவம் தெரியாமல் மெல்ல இரகசியமாகச் சொல்லுதலே மந்தம் என்பர். மனத்துள் தியானிப்பதை மானஸ்ம் என்பர். இந்த மூன்று முறை களிலும் ஒன்றைவிட ஒன்று சிறந்தது. மிகச் சிறந்ததாகிய மானஸ்மே பெரியோர் விரும்புவது.

அம்மையின் மந்திரத்தை இடைவிடாமல் தம் சிந்தை பிலே நிலைபெறச் செய்து தியானிக்கும் செயலையுடையவர் இந்த அன்பர். -

சிங்தையுள்ளே - மன்னியது உன் திருமந்திரம்.

அம்பிகையின் மந்திரங்கள் பலவகைப்படும். ஏகாrரி,

வாrரி, பஞ்சதசாrரி, ஷோடசாrரி என்று வெவ்வேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/75&oldid=546232" இலிருந்து மீள்விக்கப்பட்டது