பக்கம்:எழில் விருத்தம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 வாணிதாசன் சங்கம் வளர்த்தான் தமிழ்வளர்த்தான் சான்றோர்க்கே எங்கும் பொருளை இறைத்தளித்துக் காத்தவன் யார்? மங்காப் பெரும்புகழ்சேர் மாத்தமிழன் கற்றளி எங்கும் கிடைக்கிறதே என்னஇதன் பொருளாம்? பூம்புகார் திடலில் மக்கள் வெள்ளத்தில் மகிழ்ச்சி ஆரவாரமும் கைத்தட்டலும் இன்று நினைத்தாலும் என் மெய் சிலிர்க்கிறது. - புகழ்வும் நெகிழ்வும் நினைத்துப் பார்க்கின் எவ்வளவோ நிகழ்ச்சிகள் என் கண் முன் நிழலாடுகின்றன. 18.6.72 தென்னாற்காடு தமிழ்க் கவிஞர் மன்றம் எனக்குப் புதுவை நகர மன்றத்தில் பாராட்டு விழா எடுத்தது. அவ்விழாவை முன்நின்று நடத்திய பெருமை மன்றச் செயலாளர் என் கெழுதகை நண்பர் கவிஞர். க.பொ. இளம் வழுதியைச் சாரும். இவ்விழாவில் எனக்குக் கவிஞரேறு என்ற பட்ட மும் வெள்ளிக் கேடயமும் தந்து பாராட்டினர். விழாவில் தமிழக அறிஞர்களும் புதுவை அமைச்சர்களும் பங்கு கொண்டனர். புதுவைச் தமிழ்ச் சங்கமும் என்னைப் பாராட்டத் தவறவில்லை. அது புதுவை நகர மன்றத்தில் 6-5-73இல் பாவலர்மணி என்ற பட்டத்தையும் வெள்ளிக் கேடயத்தையும் எனக்களித்து என்னைப் பாராட்டிச் சிறப்பித்தது. விழாவில் புதுவை அமைச்சர்கள் நகரத் தந்தை குபேர் முதலியோர் பங்கேற்று என்னைப் பாராட்டினார்கள். நினைத்துப் பார்க்கின் இவையெல்லாம் என் தமிழ்க் கவிதைகட்குக் கிடைத்த பரிசென்றாலும் எனக்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்த தமிழ் அறிஞர்களில் பலர் எனக் களிக்கப்பட்ட பாராட்டைக் கண்டு களிக்காமல் அமரர் ஆயினரே என்ற