பக்கம்:எழில் விருத்தம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் விருத்தம் 41 கொள்ளி நுனியெரி தீயோ, கொம்பிடைப் பூத்த செம் பூவோ வெள்ளை நிறத்தொடு புள்ளி மேவிய சேவலின் கொண்டை? துள்ளி இறகினை தட்டித் தொடர்ந்திடு பெட்டையின் பக்கம் பள்ளம் சீய்த்திடு சேவற் கூக்குரல் பைந்தமிழ்ப் பாட்டாம்! 1 புன்செய் வயல்வெளி நட்டுப் போற்றிவ ளர்த்திடு முற்றா மஞ்சட் கிழங்கினை மானும் வாய்த்தவி ரல்களைக் கொண்டே நன்சென் வளந்தரு குப்பை நன்மணி நாளெலாம் சீய்த்தே கொஞ்சு மணிக்குரற் சேவல் குப்பைகு லைத்தர சாளும் 2