பக்கம்:எழில் விருத்தம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 வாணிதாசன் உன்னில் தோன்றிய மின்விசை யதனால் ஊரில் தோன்றிய இருள்கடிந் தனையே! செந்நெல் நீள்வயல் நீரினை இறைத்தாய்; சிறிய நற்றொழிற் சாலைகள் இயக்கிப் பொன்வி ளைத்தனை! புதுப்புதுப் பொருள்கள் புவிக்க ளித்தனை! உன்னரும் புகழை என்ன கூறுவேன்! அருவிநீ இலையேல் ஏற்றம் கண்டிட இயலுமோ உலகே? 9 அள்ளி யள்ளியே மக்களுக் களித்த ஆன்ற வள்ளலும் அழிந்தனர்; அறிவேன்! வள்ளல் வாரியே வழங்கிய பொருளும் வற்றிப் போனதும் அழிந்ததும் அறிவேன்! கொள்ளக் கொள்ளவும் குறைவுறா தளிக்கும் குன்றம் சூழ்மலை அருவியே! உனது வெள்ள நீரினை வழங்கியும் குறையா வீறு பெற்றவர் உலகினில் இலையே! 1 O "ஆதி மாவொடும் கூவிளம் விளமா ஆகு மாயரை யடியிருங் குழலே !” என்னும் விருத்தப் பாவியல் விதிக்கேற்ப அமைந்த கழிநெடில் ஆசிரிய விருத்தம். முதலில் குறியமா சீரும், கூவிள மும், விளமும், மாச்சீரும் புணர்ந்திரட்ட வந்துள்ளமை காண்க.