பக்கம்:எழில் விருத்தம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் விருத்தம் 73 13. என்றன் வீடு (கலித்துறை) என்றன் வீடென இயம்பிடப் போற்றிட ஏதுரிமை? உன்றன் வீடெனும் உணர்வினை உணர்த்திய உன் முன்னோர் சென்ற செய்தியைச் செப்பிடச் செவியினில் சேர்த்தாயோ? என்றும் வீடெனும் இடமெலாம் எவர்க்குமே இடமாமே! 1 சின்ன வீட்டினில் சேலிய மேட்டினில் சிறாரோடு முன்னம் வாழ்ந்ததை முதுமையில் வாழ்வதை முறையாக்கி இன்னும் எங்கிடும் என்மன வியப்பினுக் கென்சொல்வேன்? அன்னை தந்தையின் அன்புளம் என்னரம் வீடாமே! 2