பக்கம்:எழில் விருத்தம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் விருத்தம் பொன்செய் செங்கதிர் புதரிடைப் புகுந்திட எழுந்துவரு விண்செய் விந்தையை வியந்திட விடியலில் வெளிவந்தே பண்செய் புட்களின் பாடலில் அறிவைநான் பறிகொடுக்கப் புண்செய் மக்களின் குறையினைப் போக்கிடும் என்விடே! கன்று தாய்முலை முட்டிடக் களிப்பினில் காரெருமை நின்று கால்சொரி நிலையினில் கொட்டகை நீண்டிருக்க முன்றில் சிட்டினை அணிலிசை முழு வயர் தெருத்திண்ணைத் தென்றல் பாய்ந்திடச் சிரிப்பொலி பாய்ந்திடும் என்விடே! நாயு றங்கிட நானுறங் கிடச்சிறு நலங்கிள்ளித் தாயு றங்கிடத் தழையிருள் உறங்கிடத் தாழ்வெள்ளி போயு றங்கிடப் பொன்னொளி எழுந்திடப் புலர்காலை வாயு றங்கிடாப் புள்ளினம் வாழ்ந்திடும் என் வீடே!