பக்கம்:எழில் விருத்தம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் விருத்தம் 93 எனக்கு உணவளிக்கு மாறு புதுவை கிருஷ்ணன் நாயர் மிலிட்டரி ஓட்டலில் என் தந்தை எனக்கு உணவு ஏற்பாடு செய்திருந்தார். அவருக்கோ ஊதியம் மாதம் 15 ரூபாய் தான். அந்த நிலையில் என்னைக் கல்லூரியில் படிக்க வைக்க அவர் என்னென்ன தொல்லைகள் பட்டிருப்பார் என்று நினைத்துப் பார்க்கின் மிகுந்த வேதனை அடைகிறேன். அவர் தம் கடமை உணர்வை எண்ணிப் பெருமைப்படுகிறேன். என் தந்தைக்குத் தெரிந்த ரொட்டிக்கடைக்காரர் வீட்டு மாடியில் நான் தங்கிப் படிக்க ஏற்பாடாகி இருந்தது. அந்த இடம் எனக்குப் பிடிபடவில்லை. இரண்டொரு மாதங்களில் வேறொரு உறவினர் வீட்டில் தங்கிப் படித்து வந்தேன். அங்கும் நான் நிலையாக இருக்க முடியவில்லை. கடைசியாக உணவு விடுதிக்கு அண்மையில் இருந்த திரு முடி நடராச செட்டியார் வீட்டு மேல் மாடியில் ஓர் அறையில் நான் தங்கிப் படிக்க ஏற்பாடு செய்திருந்தார் என் தந்தை. அந்நாளில் வெளியூரில் இருந்து வந்து தங்கிப் படிக்கும் மாணவர்கட்கு இலவசமாகப் புகலிடம் தரும் அன்புள்ளம் உடையவர் திரு முடி நடராச செட்டியார். பலருக்கு உணவும் கொடுத்துப் படிக்க வாய்ப்பளித்த வள்ளல் அவர். திரு முடி நடராச செட்டியாருக்குப் பிள்ளைகள் மூவர். மூவரும் சிறுவர்கள்; குறும்பு நிறைந்த விளையாட்டுப் பிள்ளைகள். தொடக்கப் பள்ளியில் படித்துக் கொண்டி ருந்தனர். நினைத்துப் பார்க்கின் என் இளவயதுக் குறும்பை விட அவர்கள் குறும்பு மிக மிகக் குறைவானதே. இன்றும் என் பிரெஞ்சு அகராதியில் அவர்கள் ஏடுகளைக் கிழித்திருப்பதைக் காணலாம். அதனைப் பொன்னே போல் போற்றி வருகிறேன். அவர்கள் மூவரையும் தூக்கித்