8 வாரா கூட்டம் அக் பனர்கள் ஆரியர்கள் ஆக கவே அதனைப் பயிலுகிறார்கள். இதுவன்றி வேறு எக்காரணம்பற்றி அந்த ஒரு மட்டும் செத்த மொழியைப் பயில விரும்புகின்றது. கூட்டம் வடமொழியை விரும்பும் அளவுக்குத் தமிழை விரும்புவதில்லை. விரும்புவதில்லை என்பதுமட்டுமல்ல வெறுக்கவுஞ்செய்கிறது. எனவே பார்ப்பனர்கள் ஆரியர் கள், திராவிட நாட்டிற்குறியவரல்லர் என்று கூறுவதிலே என்ன தவறு. இதை எந்த தேசீயத் தோழராவது இல்லை என்று மறுத்தக்கூற முன் வருவா. ? உண்மை இவ்வா றிருக்க ஆரிய மொழி பேசி காய்ந்த தர்ப்பையை ஆட்டு வோ ளுக்கு திராவிடர்களாகிய நாம் தலை வணங்க நேரிட்ட தேன். சேர, சோழ, பாண்டியர்களைத் தோற்றுவித்த ஒரு இனம், இமயமலையில் முக்கொடியினைப் பொறித்த ஒரு இனம், உலகுடன் வாணிபம் நடாத்திய ஒரு னம் இன்று ஒரு தெரு வழியே நடக்கக் கூடாதென்றால், கோவிலுக்குள் நுழையக் கூடாது என்றால், ஒரு குறிப்பிட்ட பானை நீரைக் குடிக்கக்கூடாதென்றால், இந்நாட்டில் ஆட்சி செலுத்துவது ஆசி ஆரிய தர்மத்தின ஒரு கூறு என்று சொல்லாமல் ஆங்கிலே யந்தான் என்று எப்படிக் கூறமுடியும். ஏனென்றால் பிரித் தானியாவிலுள்ள ஆங்கில சட்டத்தில் ஜாதிக்கொரு நீதி கிடையாதி. ஜாதிக்கொரு நீதி கூறுவது மனுதர்ம சாஸ் திரம். பெரியார் இராமசாமி அவர்கள் சொல்லுவதுபோல் இந்த நாட்டை ஆளுவது ஆங்கிலேய - ஆரிய ஒப்பந்த ஆட்சியாகும். ய இந்த நாட்டில் ஆளப்பிறந்தவன் இந்த நாட்டிற்கு வந்து குடியேறிய ஒருவனால் நாயினும் கீழாகப் நடுத்தப் படுவதை நாங்கள் எடுத்துக்கூறினால் எங்களைப் பார்ப்பன விரோதிகள், வகுப்பு வாதிகள் என்று தேசீயப் பத்தி சிக்கைகள் கதறுகின்றன. ஒற்றுமை வேண்டும் என்று குரலிடுபவர்களிடத்திலே வேற்றுமையுணர்ச்சி இருப் பானேன்? இருக்கலாமா? B. A., M. A., முதலிய பட்டக் கல்வி படித்த பார்ப்பனர்கள் தங்களைத் தனியாகப் பிரித்துக் காண்பிக்கவேண்டுமென்று ஏன் எண்ணுகின்றனர்.
பக்கம்:எழுச்சி முரசு.pdf/11
Appearance