வாதததை ருடைய 9 கைக் " அவர்களுக்கெல்லாம் எதற்காக பூணூல்? பார்ப்பன வகுப்பை ஆரிய இனத்தைப் பிரித்துக் காண்பிப்பதற்குத் தானே பூணூல் பயன்படுகின்றது. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் படிக்கும் பார்ப்பன மாணவர்களுக்கு எதற்காக பூணூல்? பேராசிரியர்களுக்கும் தலைமை ஆசிரி யர்களுக்கும் எதற்காக பூனூல்? மந்திரிகளுக்குப் பூணூல் ஏன்? பார்ப்பன நீதிபதிகளுக்கும், வக்கீல்களுக்கும், டாக்டர்களுக்கும் பூணூல் ஏன்? நாட்டின் நிலையுணர்ந்த பத்திரிக்கை ஆசிரியர்களின் தே ஆசிரியர்களின் தோளின்மேல் பூணூல் துவளு வானேன்? பார்ப்பனர்களால் வைக்கப்படும் காபி கிளப்பு களுக்குப் 'பிராமணாள் காபி கிளப்' என்று 'பிராமணாள் என்ற அடை மொழியோடு போடுவானேன். இவ்வா றெல்லாம் இருப்பதும், நடை முறையில் விடாமல் கொண்டு வருவதும் வகுப்பு வாதமல்லவா? வகுப்பு முறையில் நடத்திக்கொண்டு வருபவன் வகுப்பு வாதியா, அவையெல்லாம் அழிக்கப்பட வேண்டும் மாற்றப்பட வேண்டும் என்று எடுத்துக்கூறுபவன் வகுப்பு வாதியா? சென்ற ஆண்டு அறிஞர் G. D நாயுடு அவர் கள் பங்களாவில் எழுத்தாளர் மாநாடு ஒன்று நடந்தது. வந்திருந்தவர்களில் பெரும்பாலோர் பார்ப்பனர்கள். அவர் கள் ஒவ்வொருவர் தோளிலும் பூணூல் காணப்பட்டது. எழுதுகோல் பிடித்த அந்த வீரர்களுக்கு பூணூல் எதற் காக இருக்கவேண்டும். இத்தகைய சூதும்,கொடுமையும், நீங்க வேண்டுமென்று நாங்கள் கூறினால் நாங்கள் தேசத் துரோகிகளா? வட துருவத்திலிருந்து தென் துருவம்வரை நோக்கும் பரந்த நோக்கமுடையவர்களுக்கு இது ஏன் புலப் படவில்லை. தங்களைத் தனியே பிரித்துக்கொண்டு அதனைக் காப்பாற்றுதற்கேற்ற முறையில் சட்டங்களை வகுத்தக் கொண்டு இந்நாட்டு மதம், கலை, வர்ணாச்சிரமம், கோயில், கலாசாரம் ஆகியவைகளில் வெள்ளையர் தலையிடக் கூடா/ என்று விக்டோரியா மகாராணியாரிடம் ஒப்பந்தம் செய கொண்டார்கள். அந்தப்படி இதுகாறும் ஆங்கிலேய-ஆரிய ஒப்பந்த ஆட்சி நடைபெற்று வருகின்றது. இன்னும்
பக்கம்:எழுச்சி முரசு.pdf/12
Appearance