10 கொஞ்சம் தெளிவாக கூறவேண்டுமானால் பெரியார் இராம சாமி அவர்கள் கூறுவதுபோல வெள்ளைநிற ஆங்கிலேயனும் தவுட்டுநிற ஆரியனும் சேர்ந்து செய்து கொண்ட ஒப்பந்த ஆட்சிதான் நம்மை ஆளுகின்றது. நம்மை இன்று ஆளுவது 'ஹிந்து-லா'; 'பிரிட்டிஷ்-லா' அல்ல. ஹிந்து-லா மனுஸ்மி நதியைத் தழுவியது. மனுஸ் மிருதி சாதிக்கொரு நீதி கூறும் ஆரிய ஏடு. இதை யாரே னும் மறுக்க முடியுமா? இந்த நாட்டை ஆரியம் ஆட்சி செய்கின்றது என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் காட்டமுடியும். நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், பாலக் காட்டுக்கருகில் ஒரு சிற்றூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றை. அந்த ஊர் குளத்தில் இரண்டு ஈழவர்கள் குளித்து விட் L னர் ஈழவர்கள் மலையாளத்தில் தாழ்த்தப்பட்ட வகுப் பைச் சேர்ந்தவர்கள். ஈழவர்கள் குளத்தில் இறங்கியது குற்றம் என்று அங்கிருந்த சாஸ்திரிகள் வழக்குத் தொடுத் தனர். கீழ்க்கோர்ட்டில் குளம் பொதுவானதால் யாவரும் குளிக்கலாம் என்று தீர்ப்பு கூறப்பட்டது. உடனே சாஸ் திரிகள் மேல்கோர்ட்டுக்கு வழக்கு தொடுத்தனர். அரு கிருந்த நீதிபதி ஒரு அய்யர். கோவிலில் நுழைய உரிமை யற்ற ஈழவர்கள் குளத்தில் குளிக்கவும் உரிமையற்றவர்கள், ஆகவே குளத்தில் குளித்ததற்காக அபராதம் செலுத்த வேண்டியதோடு சாஸ்திரிகளுக்கு ஏற்பட்ட செலவையும், குளம் தீட்டுப்பட்டு விட்டதால் அதனை சுத்தி செய்வதற்கு யாகம் செய்வதற்கான செலவையும் அந்த அந்த ஈழவர்கள் கொடுக்க வேண்டுமென்று தீர்ப்பளிக்கப்பட்டது. இப் பொழுது கூறுங்கள் இந்த நாட்டில் நிலவுவது ஆங்கிலச் சட்டமா? அல்லது ஆரியச் சட்டமா? என்று. ஆங்கிலச் சட்டம் காரணமாகவா ஈழவர்கள் குளத்தில் இறங்கக் நடாது என்றும், யாகம் செய்யப் பணம கொடுக்க வேண் டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது? நீங்கள் நன்கு சிந்தித் துப்பார்க்க வேண்டும். லால்குடியில் பார்ப்பான் குளம் என்று ஒரு குளம் உள்ளது. அக்குளத்தில் பார்ப்பனர்
பக்கம்:எழுச்சி முரசு.pdf/13
Appearance