உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எழுச்சி முரசு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 மட்டுமே குளிக்க வேண்டும் வேறுயாரும் இறங்கக்கூடாது என்பதற்காகப் பார்ப்பனர்கள் வழக்குத் தொடுத்தனர். கீழ்க்கோர்ட்டில் நீதிபதி ஒரு திராவிடரானதால் 'பொதுக் குளத்தில் யாவரும் குளிக்கலாம்' என்று இரண்டு மூன்று நாட்களுக்கு முன் தீர்ப்புக் கூறினார். குளம் வெடட நம் தோழர்கள் நெற்றி வியர்வை நிலத்தில் சொட்ட உழைத் திருப்பார்கள். எந்தப் பார்ப்பனனாவது ஒரு சொட்டு வியர்வை குளம் வெட்டுவதற்கென்று சிந்தியிருப்பானா? கரையான் புற்றெடுக்கக் கருநாகம் குடியிருக்கிறது. சட்டம் னுமதிக்கிறது இத்தகைய கொடிய சட்டம் அளித்த தீர்ப்பிற்கு எத்தனை உதாரணங்கள் வேண்டும். ஆந்திர நாட்டில் ஒரு பிராமணன் ஒரு பிராமணப் பெண்ணையும், பின் ஒரு நாயுடு பெண்ணையும், மணந்தான். அந்த பார்ப் பான் இறந்த பிறகு அவனுடைய சொத்து யாரைச்சேர்வது என்று தகராறு ஏற்பட்டது. வழக்குத் தொடரப்பட்டது. படிப்படியாக உயர்நீதி மன்றத்திற்கு வந்தது. நீதிபதி சந்திரசேகர அய்யர் என்பவர். நாயுடு பெண்ணிற்குச் சொத்தில் பங்கு கிடையாது என்றும் பார்ப்பனப் பெண் ணிற்குத்தான் சொத்துரிமை உண்டென்றும் தீர்ப்பளித் தார். இந்த நீதி காந்தியார் போற்றும் மனுஸ்மிருதியில் கண்டபடி தான் அளிக்கப்பட்டது. 'எந்த பார்ப்பன னாவது பார்ப்பனரல்லாத பெண்ணை மணந்து கொண்டால் அந்தப் பெண்ணுக்கு அவன் சொத்தில் உரிமை இல்லை. எந்த பார்ப்பனரல்லாதவனாவது பார்ப்பனப் பெண்ணை மணந்து கொண்டால் அவன் சொத்திலே அந்தப் பெண் ணுக்கு உரிமையுண்டு.' என்று மனுஸ்மிருதி கூறுகின்றது..) சுயராஜ்யம் வந்தால் எல்லாம் சரியாய் போய்விடும் எனறு சொல்லுகிறார்கள் தேசீயத் தோழர்கள். நாங்கள் கேட்கி றோம் இது ஆங்கிலச்சட்டமாகுமா? இந்த நீதியை ஆங்கி லேயனா உற்பத்தி செய்தான்? ஆங்கிலேயன் வருவதற்கு முன்னமே இக்கொடுமைகள் இல்லையா? ஈராயிரம் ஆண் களாக உள்ள கொடுமையல்லவா இது! ஒரு சாரார் சேரி யில் சதுப்பு நிலத்தில் வாட, மற்றொரு சாரார் உண்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழுச்சி_முரசு.pdf/14&oldid=1732316" இலிருந்து மீள்விக்கப்பட்டது