13 லிம் லீக்கையும் ஏற்படுத்தித் தூண்டிவருவது வெள்ளைக் காரன் தான் என்றும் இதுபோன்ற கட்சிகளினால் தான் 'சுயராஜ்யம்' வரவில்லை என்றும் கூறுகிறார்கள். முஸ்லிம் களுக்கு உணர்ச்சியை ஊட்டியவர் தோழர் ஜின்னா ஒரு காலத்தில் காங்கிரசில் இருந்தவர் தான் தாழ்த்தப்பட்ட தோழர்களை ஒன்று திரட்டியது தோழர் டாக்டர் அம்பேத் கார்ஒரு காலத்தில் காங்கிரஸில் இருந்து பிறகு காந்தியாரின் உயிரைக் காப்பாற்றியவர் தான். பெரியார் ஜஸ்டிஸ் கட்சியைக் கைப்பற்றி, மக்களுக்கு உணர்ச்சியை ஊட்டித் திராவிடக்கழகமாக மாற்றினார். அவரும் ஒரு காலத்தில் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்தவர் தான் ஆனால் அம்மூவராலும் ஆரம்பிக்கப்பட்ட இயக்கங்கள் அவர்களாலே அன்றி எந்த வெள்ளைக்காரனாலும் ஆரம்பிக்கப்பட்டதல்ல. பெரியார் அவர்கள் சுட்டிக்காட்டுவதுபோல் காங்கிரஸ்தான் 1885-ம் ஆண்டு 'ஹ்யூம்' என்ற வெள்ளையனால் ஆரம்பிக்கப்பட்டது. டு‘ I.C.S பட்டம் பெறவும், இந்தியனுக்கும் வேலையில் பங்கு வேண்டும் என பாடுபடவும் வெள்ளையனால் துவக்கி வைக் கப்பட்டது. இத்தகைய நிலையில் உள்ள இவர்கள் நம்மை ஏகாதிபத்திய தாசர்கள் என்று கூறுகிறார்கள். அவர்கள் பத்திரிகை பலங்கொண்டு மக்களை நம்பும்படி செய்கிறார்கள். இதற்குக் காரணம் எதையும் நம்புவதற்கு மக்கள் இருப்ப தல்லாமல் வேறு என்ன. இத்தகைய மடமை மக்களினின் றும் நீங்கி சிந்தித்துச் சீர்தூக்கிப்பார்க்கும் நிலைமை ஏற் படத்தான் திராவிடக்கழகம் பாடுபடுகிறது. அரசியலைப் பொருத்த வரையில் நம் நாடு அடிமைப் படுவானேன்? இங்கிலாந்தில் கி.மு. 51-ல் ஜூ லியஸ் படை யெடுத்த பிறகு வேறுயாரும் படையெடுக்க வில்லை என்று பெருமையாகப் பேசிக்கொள்கிறார்கள். டேனர்கள் படை யெடுத்தார்கள் ஆனால் அவர்கள் ஆட்சிநீடிக்கவில்லை. இங்கு நமது மதிப்பிற்குரியதோழர் C.N. அண்ணாதுரை அவர்கள் கூறுவது போன்று, நமது சரித்திரத்தில் வந்தான், வந்தான் என்று இருக்கிறதேயொழிய இங்கிருந்து சென்றான் வென்
பக்கம்:எழுச்சி முரசு.pdf/16
Appearance