19 தான் வடநாட்டுத் தலைவர்கள் முயலுகின்றனர். சிலர் நாம் கூறுவதை சின்ன பிரச்சினை என்று கூறுகிறார்கள்! ஏற்றுக் கொள்ள மறுக்கின்றார்கள். உங்களுக்குத்தெரியும் காமராஜ், ராஜாஜி தகராறுபற்றி. அதன் முடிவும் உங்களுக்குத் தெரி யும். ராஜாஜி இனி தலைவராக இலாயக்கற்றவர் என்று 'தினசரி' 'பிரசண்டவிகடன்' 'தமிழ்மணி' முதலிய பத்திரிக் கைகள் கதறின. முடிவென்ன தென்னாட்டிற்குக் காந்தி யார் வந்தார். பாஜாஜி ஒரு தியாக புருஷர் என்று புகழ்ந் தார். சத்தியாக்கிரகம் தோன்றினதே ராஜாஜி வீட்டில் தான் என்றார். காந்தியார் காமராஜரைப்பற்றி ஒருவார்த்தை கூறினாரா? காந்திஜி ராஜாஜி பிரார்த்தனைக் கூட்டங்கள்! காந்திஜி ராஜாஜி சொல்லாடல்! காந்திஜி ராஜாஜி கோபால் சாமிஜி ஒன்று சேர்ந்த படங்கள். இவைகள் பத்திரிக்கை களில் வெளியாகின்றன. காமராஜ் எங்கே? காணப்பட வில்லை? பார்ப்பனரை உயர்த்தி அவர்களைக் காப்பாற்றவே வடநாட்டுக் காங்கிரஸ் பாடுபடுகின்றது. ஆகவேதான் நாம், வடநாட்டாரின் ஆதிக்கம் வேண்டாம் என்று கூறுகின் றோம். நாங்கள் கூறுவது தவறா? ஆதாரம் தருகிறோம். சென்ற வருடம் அதாவது 1945 ஆனந்த விகடன் தீபாவளி மலரில் "சுதந்திரத்திற்காக உயிர்கொடுத்த உத்தமர்களின் படங்கள் வெளியாயிருக்கின்றன அப்படங்களில் வடநாட் டுத்தலைவர்கள் போக மீதி உள்ள தலைவர்கள் படங்கள் எல் லாம் பார்ப்பன ருடையனவே. பார்ப்பனர்கள் மட்டுந்தான் தென்னாட்டுத் தியாகிகளா? விஜயராகவாச்சாரியார், ரெங்க சாமி அய்யங்கார் போன்றவர்கள் தான் தியாகிகளா? எ!. தேசீயத் தோழனே வ. உ. சிதம்பரம் பிள்ளையின் படம் எங்கே? கப்பலோட்டித் தன் பொருளையெல்லாம் வாரியி றைத்த அந்தத் தமிழன் படம் எங்கே? தடியடிபட்டு உயிர் விட்ட குமரன் படம் எங்கே ? ஏன் இவர்களுடைய படம். இல்லை? காரணம் திராவிடர்கள். ஏ! தேசீய திராவிடனே உனக்கு ஏன் இன்னும் மானம் பிறக்கவில்லை. காங்கிரஸ் பார்ப்பனர்களுக்குச் சலுகை காட்டுகின் றது என்பதற்கு எத்தனை உதாரணங்கள் வேண்டும். " சர்.
பக்கம்:எழுச்சி முரசு.pdf/22
Appearance