20 கே.வி. ரெட்டி மந்திரியாக வந்தபோது "நாங்கள் குதிரை களை அனுப்ப கழுதையை தேர்ந்தெடுத்தனர்" என்று கூறிய அதே ஆச்சாரியார் தோழர் டி. எஸ். எஸ். ராஜனைக் கொல் லைப்புறமாக கொண்டுவந்து மந்திரியாக ஆக்கினாரே இதற்கு என்னபதில்? தோழர் C. N. அண்ணாதுரை அவர்கள் எழு தினதுபோல் 'கோடு உயர்ந்தது குன்றம் தாழ்ந்தது' திருச் செங்கோடு உயர்ந்தது, திருப்பரங்குன்றம் தாழ்ந்தது. ஆரியர் உயர்ந்தனர் திராவிடர் தாழ்ந்தனர். பார்ப்பனர் ர்ந்தனர் அல்லாதார் தாழ்ந்தனர். இதற்கு வடநாட்டுக் காங்கிரஸ் ஆதிக்கந்தானே காரணம். அது மட்டுமல்லாமல் பொருளாதாரத் துரையிலும் வடநாட்டின் தொடர்பு கூடாது என்கிறோம். வடநாடு தென்னாட்டைச் சுரண்டுகின்றது தென்னாட்டின் பணம் வடநாட்டில் சென்று அடங்குகின்றது. இந்நாட்டின் வாணி பம் வடநாட்டார் கையிலுள்ளது. தோழர் அண்ணாதுரை குறிப்பிடுவது போன்று வைர வியாபாரத்திற்கு இங்கு ஒரு சுராஜ்மல்ஸ்; பவுனுக்கு ஒரு பாபாலால்; ஸ்டோர்ஸ்க்கு குப்தா ஸ்டோர்ஸ்; இரும்புக்கு டாடா; கப்பல்கட்ட வால் சந்த் ஹீராச்சந்த்; மோட்டாருக்கு பிர்லா; எணிக்குச் செல்லாராம்; பத்திரிக்கைக்கு கொயங்கா; காபி கிளப் பிற்கு ஆரியபவான் இம்மாதிரி எல்லா வாணிகத்திற்கும் வடநாடு இந்நாட்டிலுள்ள பாங்கிகளில் அநேகம் வடநாட் டாருடையன. தோழர் அண்ணாதுரை 'பணத்தோட்டம்' என்ற கட்டுரையில் இவற்றை நன்றாக விளங்கவைத்திருக்கி றார். பாரத்பாங்கு இங்கே அதற்குக் கோடிக்கணக்கான ரூபாய் லாபம்.காம் சந்த் நினைத்தால் இங்கு ஒரு தொழில் நடத்தலாம். ஆனால் கருப்பண்ணன் செட்டியாரால் அங்கு சென்று ஏதாவது செய்யமுடியுமர்? நமது பணத்தில் ஒரு பாகம் கரம் சந்துகளிடம் போகின்றன். மற்றொரு பாகம் நாட்டுக்கோட்டைச் செட்டிமார்களால் பர்மாவில் கொண்டு போய் முடக்கப்படுகின்றது. செட்டிமார்கள் பர்மாவில் நிலம் வாங்குகிறார்கள். வட்டிக்கடை வைக்கிறார்கள். நீங் கள் நன்றாக சிந்தித்துப் பார்க்கவேண்டும். இங்குள்ள பணம்
பக்கம்:எழுச்சி முரசு.pdf/23
Appearance