உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எழுச்சி முரசு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 அணுசக்தியை உபயோகிக்கும் முறையைத் தேடுகிறார்கள். இங்குள்ள படித்த மேதாவிகளின் வேலை பயனற்ற கிரீடத் தைப் பொருட்காட்சி சாலையில் வைத்து மக்களுக்குக் காட் டுவதா? அதைப் பார்க்க நான்கு அணா டிக்கெட்டா? தேசீயப் பத்திரிகைகள் தைப்பற்றிக் கண்டிப்பதில்லை. கடந்த ஜூன் மாதத்தில் எத்தனை மாணவர்கள் கல்லூரி யில் இடமில்லை என்று அலைந்கார்கள் என்பகை நீங்கள் அறிந்திருக்கலாம் பத்திரிகைகள் பத்திபத்தியாக எழுதின 'ஷிப்ட்" முறை கல்லூரிகளில் வேண்டுமென்று அதே சமயத்தில் 12 லக்ஷ ரூபாய் கிரீடத்தில் முடக்கப் பட்டதே! 12 லக்ஷ ரூபாயில் எத்தனை கல்லூரிகள் கட்டி யிருக்கலாம்! திராவிட கழகத்தாரைத் தவிர வேறுயாருக்கு இதைப்பற்றிச் சிந்தனை எழுந்தது. இந்த நிலையில் ஒரு தனிப்பட்ட சமுதாயம் உண்டு, உறுஞ்சி உப்பி வாழுகின்றது இந்நாட்டில். சீரங்கத்தின் கோவிலில் பாடுபட்ட மக்களது பொருள்களைப் பார்ப்பனர் கள் தானே உண்டு கொழுக்கிறார்கள். கோவில்களிலும், மடங்களிலும் எவ்வளவு சொத்துக்கள் முடக்கப்பட்டிருக் கின்றன! ருவாரூர் கோவிலுக்கு இரண்டாயிரம் வேலி நிலம்! தருமபுர ஆதீனத்தற்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட வேலிகள். நாணயமாக வழங்கப்பட வேண்டியவை குதிரை வாகனங்களாகவும், வெள்ளித் தேர்களாகவும், தங்கத்தால் உருக்கப்பட்ட பொம்மைகளாகவும் கோவில்களிலிருந்து அழிந்துபடுகின்றன. இவ்வாறு நாட்டு வளங் குன்றலாமா மக்களுக்கு அறிவிருந்தால் அழகர் வைப்பாட்டி வீட்டிற் செல்லும் சித்திரைத் திருநாள் பார்க்க மதுரைக்குச் செல் வார்களா! ஸ்ரீமுஷ்ணம் கோவிலில் உள்ள சாமியின் தங்க பூணூல் காணாமற் போய்விட்டது. வழக்கு தொடாம் பட்டது கோர்ட்டில் கோவில் அர்ச்சகரான அய்யங்கார் ஒருவர் திருடியதாக தீர்ப்பாயிற்று. உடனே அந்த அர்ச் சகன் நம்மவர்களிடம் ஓடி தன்னைக் காப்பாற்ற வேண்டு மென்று கெஞ்சினானாம். "என்னமோ தெய்வாதீனத் தீர்ப்பு. நீங்கள் மனசு வையுங்கள்" என்று அய்யங்கார் கூறினானாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழுச்சி_முரசு.pdf/28&oldid=1732330" இலிருந்து மீள்விக்கப்பட்டது