26 சா உடனே பக்த கோடிகள் ஆளுக்கு ஐம்பது ரூபாய், நூறு ரூபாய் என்று போட்டு அந்த அர்ச்சகனைக் காப்பாற்றினார் களாம். அதே கோவிலில் அம்மன் தாலி இருமுறை அறுக் கப்பட்டு காணாமற்போய்விட்டதாம். தாலியையும் பூனூ லையும் பறிகொடுத்த சாமி,தன்னைக் காப்பாற்றிக் கொள்ள திறனில்லாத சாமி, திருட்டைக் கண்டுபிடிக்க போலீச ரைத் தானே நாடிற்று! எங்கே போயிற்று ஆண்டவன் சக்தி. இந்த ஊழல்களைப் படித்தவனும் நம்பிக்கொண்டு செய்துகொண்டுதானே இருக்கிறான். இவற்றைக் கட்டி அழுவதற்குத் தானே வாரியார்களும், கல்யாணசுந்தரங்க ளும், சேதுப்பிள்ளைகளும் இருக்கின்றனர். ஆகவே நாம் இவற்றில் தலையிடாமல் எங்ஙனம் புரட்சி ஏற்படுத்த இய லும். லெனின் கூறியபடி 'சிந்தனையில் புரட்சி ஏற்படாத வரையில், செயலில் புரட்சி ஏற்படமுடியாது.' வாழ்க்கை யிலிலுள்ள ஊழல்களை எடுத்துச் சொல்லாமல் மக்களை எப்படித் திருத்தமுடியும். தொழிலாளர்கள் தாழ்ந்த நிலை யிலிருப்பதற்குக் காரணம் பொருளாதாரம் மட்டுமா? தொழிலாளர்களைக் கேட்டால் அவர்கள் சொல்லுவார்கள், போன சென்மத்தில் செய்த பாவத்தினால் இந்த சென்மத் தில் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது என்று உண்மையி லேயே தொழிலாளியின் தாழ்ந்த நிலைக்குக் காரணம் மத மும் கடவுளுமல்லாமல் வேறு எது என்று சொல்ல முடி யும். உள்ளத்தே புரட்சியை ஏற்படுத்தாமல் புரட்சியை நடத்திக்காட்டமுடியும். 0 எங்ஙனம் வழக்கத்திலும், கதைகளிலும், புராண நூல்களிலும் கோவிலில் உள்ள சிவனுக்கு 'லிங்கம்' என்ற பெயர் என்று கூறப்படுகிறது. 'லிங்கம்' என்றால் என்ன பொருள் தெரி யுமா? சொல்லவும் நா கூசுகிறது. அகராதியைப் புரட்டி பாருங்கள் 'லிங்கம்' என்றால் ஆண்குறி என்று பொருள் கூறப்பட்டிருக்கும், 'லிங்கம்' ஏற்பட்டதற்குப் பல புரா ணக்கதைகள் உண்டு. அதில் ஒன்று:-தாருகா வனத்தி லிருந்த ரிஷி பத்தினிமாரை சிவன் மோகங்கொண்டு கற் பழித்தாராம்! பின்பு இதை உணர்ந்த ரிஷிகள் கோபங்
பக்கம்:எழுச்சி முரசு.pdf/29
Appearance