30 பிடிக்கப்பட்ட புதுமையை, ஹிந்தி மூலமோ வடமொழி மூலமோ எப்படி உணர்வது? நம் தாய் மொழியாகிய தமிழ் இன்று பள்ளிக்கூடங்க ளில் கட்டாய பாடமாக இல்லை. ஐந்தாம் வகுப்புமுதல் கல்லூரி வகுப்புகள் வரை தமிழ் இன்று விருப்பப் பாட மாக உள்ளது தமிழன் வாழ்ந்த உறையூர்,மதுரை,புகார், தொண்டி இன்னும் இருக்கின்றன. அவற்றைப்பற்றிய முன் னாள் செய்தி யாருக்குக் தெரியும்! தமிழ் வளர்க்கப் பாடு படும் கரந்தை தமிழ்ச் சங்கம் பிச்சை எடுக்கின்றது. ஆனால் இந்நாட்டில் இந்தியைப் பரப்ப 36000 ரூபாய் (மு பத்தாறாயிரம்) அளிக்கப்படுகின்றது. யாராவது தமிழ் வழர்ச்சிக்கென்று பெரும் பொருள் வழங்குகின்றார்களா? எல்லா நலனும் இழந்த தமிழனுக்கு மீதி யிருப்பது தமிழ் ஆகவே தமிழுக்கு ஊறுவிளையும்படி வேண்டாத இந்தியை மீண்டும் புகுத்த முயன்றால் பல போர்க்களங்கள் ஏற்படும் என்பத மட்டும் உறுதி. தான். படை இறுதியாக எங்குந் தோன்றிவரும் கறுப்புச் சட்டைப் டயைப்பற்றி சில கூறி என் பொழிவை முடிக்க விரும்பு கிறேன். கறப்புச் சட்டைப் படை இயக்கம் வேண்டு மென்று பெரியார் அவர்கள் திருச்சி மாநாட்டில் வலியுறுத் தினார். கறுப்புச்சட்டைப் படையினரைத் திருடர்கள் என் றும், பாஸிஸ்டுகள் எனறும் நமது எதிரிகள் கூறுகிறார்கள். ஏளனம் செய்கிறார்கள். கறுப்புச் சட்டை தரித்த நாம் திரு டர்கள், பாஸிஸ்டுகள் என்றால் வக்கீல்கள் அக்தனை பேரும் திருடர்கள், பாஸிஸ்டுகள் ஆகவேண்டும். நீதிபதிகள் யாவ குதிருடர்கள் ஆகவேண்டும் பட்டம் பெறச் செல்லும் மாணவர்களும் அப்படித்தான். ஆங்கில முறைப்படி விருந் திற்குச் செல்வோர் பாஸிஸ்டுகள் ஆகவேண்டும். கறுப்புக் கும், சிவப்புக்கும் மதிப்பு கொடுப்பது மனப்பான்மையைப் பொருத்தது. நாம் இன்று இழிந்த நிலையிலுள்ளோம் என்ப தைக் காண்பிப்பதற்காகவே கறுப்புச்சட்டை அணிந்துள் ளோம். ஒன்று நாம் அல்லது நமது எதிரிகள் அறியவேண்
பக்கம்:எழுச்சி முரசு.pdf/33
Appearance