2 31 டும். போராட்டத்தில் அது நமது அழிவிற்கு அறிகுறி யாக இருக்கட்டும். இல்லையேல் நம் எதிரிகளின் அழிவைக் காட்டும் அறிகுறியாக இருக்கட்டும் என்று திராவிடர்கள் போராட்டத்தில் வெற்றி பெறுகிறார்களோ அன்றுதான் கறுப்புநிறம் சிவப்பாக மாறும் என்பது உறுதி. கறுப்புச் சட்டை அணிந்துள்ள நம்மைப்பார்த்து இகழ்கிறார்கள். இந்தியன் எக்ஸ்புரஸ்" செய்தித்தாளில் கறுப்புச் சட்டைப் படை இயக்கத்தை இழித்துக் கூறுவதுபோல் ஒரு படம் வந்திருந்ததை யாரும் பார்த்திருப்பீர்கள். அப்பத்திரிகை யின் ஆசிரியர் கொயங்கா ஒரு வட நாட்டான். அந்தப் படத்தில் பெரியாரைப் பிச்சைச்காரனைப்போன்று கறுப்பு நிறத்தில் போடப்பட்டிருக்கிறது. அவர் கையில் ஒரு கிழிந்த தொப்பியை ஏந்தி பிச்சை எடுக்கிறார். அவர் முன்பு ஒரு கறுப்பு உருவம் வந்துகொண்டிருக்கிறது. பெரியார் ய இடுப்பில் கட்டப்பட்டிருக்கும் கயிற்றைப் பின்னால் வரும் நான்கைந்து குருடர்கள் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். அதைக்கண்டு பக்கத்திலுள்ள கடையிலிருந்துகொண்டு பூனூல் துவளும் தொந்தியுடன் கூடிய ஒரு ஐயர் சிரிப்பதைப் போலவும், அண்டை வீட்டின் கதவருகில் ஒரு ஐயர் குடும் பம் நின்று இதைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருப்பது போலவும் படம் போடப்பட்டிருக்கிறது. இந்நாட்டிற்கு ஆடு மாடு மேய்ப்பதற்காக வந்த ஒரு பிச்சைககாரக் கூட்டம், ஒண்ட வந்த கூட்டம் நாட்டு மக்களின் தலைவரை தலை வரை இகழ்ந்துரைக்க முற்பட்டதென்றால், அது அந்தப் பிச்சக்கார கூட்டத்தின் ஆணவமல்லவா? படம் போடுவது கருத்தை விளக்குவதற்கு என்பதை ஒப்புக்கொள்ளுகிறேன் அதற்கும் ஒரு முறை வேண்டாமா? இழிவான I முறையில் போடுவதா? சரி நாங்கள் சொல்லுகிறோம் படம் போடு! நீ இழித்துக் கூறும் எண்ணத்துடனேயே போடு! அந்தராத்மாவோடு பேசும் மகாத்மாவின் பேரால் போடு! அகிம்சையின் பேரால் போடு! ஆனவத்தின் பேரால் போடு! எதேச்சதிகாரக் கட்சி மனப்பான்மையின் பேரால் போடு! சுயராஜ்யத்தின் பேரால் போடு! இந்நாட்டில் மற் கட்சிகள் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தின் பேரால்
பக்கம்:எழுச்சி முரசு.pdf/34
Appearance