3 வேண்டியது இன்றியமையாததாக இருக்கின்றது இங்கு செய்தித்தாள் வசதியுள்ள ஒரு வகுப்பார் திராவிட கழக்க தினரைத் துரோகிகளென்றும்,ஏகாதிபத்திய தாசர்கள் என்றும் பொய்ப் பிரசாரம் செய்துவருகிறார்கள். தேசீயப் போர்வையில் இருக்கும் அவர்களைத்தவிர மற்றவர்கள் இருக்கக்கூடாது என்றும் எண்ணுகின்றனர். நீங்கள் எண்ணிப்பார்க்கவேண்டும் எங்களுக்கு நாட்டுப்பற்று ஏற் பட வழியில்லையா? நாட்டுப்பற்று தேசீய வாதிகள் உள் ளத்தில் மட்டுந்தான் எழக்கூடியதா? நாங்கள் தேசத் துரோகிகளாகக் கருதப்படுவானேன்? நீங்களே சிந்தித்து நல்ல தீர்ப்புக் கூறவேண்டும் என்பதற்காகவே வழக்கை உங்கள் முன்வைக்க விரும்புகிறோம். நாம் உலகத்தின் பல நாட்டின் நிலைமைகளை உணரு கிறோம். அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா போன்ற நாடு களிலுள்ள மக்கள் வாழ்க்கை நிலையை அறிகின்றோம். அங்கு பொது இடங்களில் மக்கள் தோளோடு தோள் புணர்ந்து நடமாடக் காண்கிறோம். அவர்கள் வேறுபா டின்றி பழகுவதைப் பார்க்கிறோம். பிறகு நம் நாட்டை நோக்குகிறோம். நம் நிலை என்ன? ஏன் ஒரு குறிப்பிட்ட சந்து வழியே செல்லக்கூடாது; ஒரு குறிப்பிட்ட குளத் தில் இறங்கக்கூடாது; கோவிலுக்குள் நுழையக்கூடாது; காலில் செருப்புப்போட்டுக்கொண்டு வெள்ளை வேட்டி டிக்கொண்டு உயர்ந்த வகுப்பார் முன்வரக்கூடாது. மாதிரியான நிபந்தனைகள் ஏன்? நாம் ஒரு இனத்தைச் சேர்ந்த பெருங்குடிமக்கள் என் மிகக் கேவலமாக வெறுக் கப்படவேண்டும்? ஆரியர்கள் அருகில் சென்றால் ஒத்திப் போ" என்று சொல்லும் நிலைமை என் இங்கு இருக்கவேண்டும் ? இவற்றைக்கண்டே நாம் உணர தோம். நாம் மிருகங்களிலும் கேடுகெட்டவர்களா? நாயைத் தடவி கொடுக்கின்றான். எருமையைத் தீடி ஓட்டுகின்றான். அவற்றை மேன்மை நிலையில் வைத்திருக் கும்போது, உழைக்கும் மக்கள் கூட்டம் மட்டும் இங்கு இவ்வாறு வெறுக்கப்படும் நிலையில் ஏன் இருக்கவேண்டும். வந்
பக்கம்:எழுச்சி முரசு.pdf/6
Appearance