4 இக்கொடுமை உலகில் வேறு எங்கேனும் உண்டா ? இந் நாட்டில் பல்வேறுபட்ட வீதிகள்! கோவிலில் சிலரே சில இடங்களுக்கு மட்டும் செல்லலாம்! ஆலையம் கட்டிவைக்க ஒரு கூட்டம்! அதன் உள்ளே நுழைய ஒரு கூட்டம்? ஆண்டவனை செய்துவைக்க ஒரு இனம் அதனைத்தொட மற்றொரு இனம் இவற்றையெல்லாம் ஏனென்று கேட் டால், மீறி நடந்தால் இந்த விசித்திர நாட்டில் சிறைச் சாலை! இவையெல்லாம் கொடுமைகளல்லவா? இப்பேர்ப் பட்ட அநீதிகள் எவற்றின் பேரால் நடைபெருகின்றன? இவையெல்லாம் ஆட்சி வெள்ளையன் கையில் இருக்கின்ற ஒரே காரணத்தினாலா நடக்கின்றன? உண்மையிலேயே வெள்ளையனா இப்படிப்பட்ட அநீதிச் சட்டங்களுக்கு முழுக்காரணம்? கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட தோழர் கள் போகக்கூடாது என்று அவனா தடுகின்றான். கோவி லில் சிறுநீரும், புழுக்கையும் லிங்சுத்தின் மேல் விழும் வௌவால்களும், மலம் தின்னும் நாயும், சாணம் போடும் மாடும் போகலாம். ஆனால் பகுத்தறிவு படைத்த ஆறு கோடி மக்கள் உள்ளே செல்வதற்கு அனுமதி இல்லை! ஏன் இந்த இழி நிலை! அந்தராத்மாக்களுடன் அடிக்கடிப் பேசுகின்ற மகாத்மாக்களும் இதைப் பார்த்துக்கொண்டு தானிருக்கின்றன. இவற்றிற்கெல்லாம் உரிய களை நாம் உணர முன் வராவிட்டால் நாம் மக்களாக வாழ விரும்பவில்லை என்பதோடு எதையும் சாதிக்க இயலாதவர் களாகவும் கருதப்படுவோம் என்பதைத் திராவிட மாணவர் கள் சிந்திக்கவேண்டும். ( க காரணங் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில் மக்களுக்கு அவர்தம் வாழ்க்கையிலே கொடுக்கப்படும் உரி மைகள் இந்நாட்டில் நமக்கு மறுக்கப்படக்காரணம் என்ன? 47 நாடற்றவர்களா? மற்றைய நாட்டு மந்கள்போல் நமக்கென்று ஒரு நாடு கிடையாதா? நாம் யார்? என்ப வற்றை அறிய ஆராய்ச்சி அவசியமாயிற்று. வரலாற்று ஏட்டுச் சுவடியைப் புரட்டினோம். அதில் நாம் வாழும்
பக்கம்:எழுச்சி முரசு.pdf/7
Appearance