5 сл நாடு திராவிட நாடு, நமக்குரிய நாடு திராவிட நாடு எனக் கண்டோம் ஐந்தாம் பள்ளி வகுப்பு முதல் ஐந்தாம் பல் கலைக்கழக வகுப்பு வரையில் ஐயர், ஆச்சாரி, சாஸ்திரி சர்மா இவர்கள் எழுதிய முதல் பக்கத்தில் இந்நாட்டுப் பூர் வீகக்குடிகள் திராவிடர்' என்றிருக்கக்கண்டோம். அவர் தம் மொழி தமிழ்,தெலுங்கு, கன்னடம், துளு, மலையாளம் என்றிருந்தது திராவிடர்கள் வாணிபத்திலும் வீரத்தி லும் சிறந்து விளங்கினார் என்றும் கூறப்பட்டிருந்ததோடு அவரது சிறந்த பண்பும் கோட்பாடுகளும் தனியாகவே தூய்மையாக இருந்தன என்றும் குறிக்கப்பட்டிருந்தது. முதல் பாகத்தைப் புரட்டி இரண்டாம் பாகத்திற்கு வந் தோம். இரண்டாம் பாகத்தில் 'ஆரியர் வருகை இருந்தது. அதன் கீழ் ஆரியர்கள் பூர்வீகத்தில் மத்ய ஆசி யாவிலிருந்து கைபர் போலன் கணவாய்கள் வழியாக ஆடு மாடுகளை ஒட்டிக்கொண்டு இந்தியாவிற்குள் புகுந்து சிந்து குதிக் கரையை என அடைந்தனர். அவர்களாலேயே ருக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களும் எழுதப்பட்டன. அவர்களது மொழியாகிய பிராகிருதம் பிறகு சமஸ்கிருதம் என்று அழைக்கப்படடது அவர்கள் யாக மந்திரம், காயத்திரி ஜெபம் ஆகியவற்றை அம்மொழியி லேயே செய்துவந்தனர். அவர்கள் சோமபானம் என்றும் மதுவை உண்டுவந்தனர். யாகத்தில் பலியிட்ட ஆடுமாடு களின் மாமிசத்தைப் புசித்துவந்தனர் என்று இவ்வாறாக எழுதியிருக்கக்கண்டு பின் ஏட்டைக்கொண்டு நாட்டைப் பார்க்கத் தொடங்கினோம். சேரிக்குச் சென்றோம் அங்கே உள்ளவர்களை உங்கள் தாய்மொழி எது என்று கேட்டோம். 'தமிழ்' என்றார்கள். குடியானவர்களைக்கேட்டோம் 'தமிழ்' என்றார்கள். உ ழைப் பாளிகளைக்கேட்டோம் 'தமிழ்' என்றே பதில் வங்க. செட்டியார் நாயுடு முதலியவர்களைக்கேட்டோம் தமிழி லிருந்து பிறந்த 'தெலுங்கு' என்றார்கள். தமிழ்க் கற்றறிந் தவர்களை உங்கள் நூல்கள் எவை எனக்கேட்டோம்.
பக்கம்:எழுச்சி முரசு.pdf/8
Appearance