பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


26 வேகமாக அச்சிடும் - - வண்ணம் வண்ணமாக அச்சிடக் கூடிய - ஆற்றல் மிகுந்த அச்சியந்திரங்களை அயல் நாடு களிலிருந்து இறக்குமதி செய்து, அவற்றை இயக்கக் கூடிய திறமையானர்களுக்குப் பயிற்சி அளித்து, முன்னேற்றம் கண்டிருக்கிருச்கள் பத்திரிகைத் தொழில் அதிபர்கள். இந்த இயந்திரங்கள் சோம்பிக்கிடந்தால், முதல் மூடக்கம் - நஷ்டம் என்ற அடிப்படையில், அவற்றை ஃபீட் பண்ணுவதற்காக ஒவ்வொரு பத்திரிகை நிறுவனமும் இரண்டு மூன்று (சில தாலைந்து பத்திரிகைகள் கூட) ஆரம் பித்து தடத்துகிறது. வேக உற்பத்தியும் விற்பனை நோக்கும் தான் முக்கியமானவை. உயர்ந்த தரம் என்பது அவர்களது கவலேக்குரிய விஷயம் இல்லை. அச்சுக்கலை நன்கு வளர்ந்திருப்பதை இன்றையப் பத்திரிகைகள் எடுத்துக்காட்டுகின்றன. பணபலமும் இயந்திரத் துணையும் கொண்டு வளர்கிற - வளர்க்கப்படுகிற ஒரு இண்டஸ்ட்ரி (தொழில்; வியாபாரம்) ஆகத்தான் பத்திரிகையும் கருதப்படுகிறது. அதில் முதலீடு செய்துள்ள தொழில் அதிபர்கள், பத்திரிகை படிக்கிற வாச கர்களை, தங்களுடைய உற்பத்திச் சரக்கை வாங்கவேண்டிய - வசங்கக்கூடிய - கன்ஸ்யூமர்ஸ் (நுகர்வோர்) ஆகவே மதிக்கிருர்கள். அவர்கள் விற்பனை செய்கிற சரக்குகளையே விரும்பி வாங்கக்கூடிய மனநிலையை நுகர்வோரிடம் உண்டாக்கிவிடுவது தொழிலதிபர்கள் கையாளும் வாணிப உத்திகளில் முக்கிய ம்ானது ஆகும். - தாங்கள் தொடர்ந்து லாபமும் ஏற்றமும் பெற்றுக் கொண்டிருப்பதற்கு, மக்கள் அறிவு விழிப்பும் சித் த னை