பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


安9 பத்திரிகைகளும் எழுத்தாளர்களும் கஷ்ட நஷ்டங்களைத் தாங்கிக் கொண்டு, மன உறுதியோடு வாழ்ந்தார்கள். கால ஓட்டத்தில் வாழ்க்கை மதிப்புகள் பற்றிய கண்ணுேட்டமே மாறிவிட்டது. பனமும் புகழும், சுகவாழ்வும் தான் சமூக வாழ்வில் முக்கியம் என்ற எண்ணமே பெரும் பலருக்கும் ஏற்பட்டு விட்டது. எழுத்தாளர்களும் மனிதர்கள் தானே. அவர்களிடமும் இவ் இயல்புகள் மேலோங்கி வளர்கின்றன. So క్ష 4 à. ' بدسن مساسی. سی مبدهی مسمیمی. میرحسب سوسیایه میی வாசகர்கள் எல்லோருமே எழுத்தின் தரம் அறிந்தும், நயம் உணர்ந்தும் படிப்பதில்லை. ਾrੀ வாசகர்கள் - சாதாரண வாசகர்கள் -பெரும் பலர் எழுதியவர் யார் என்றுகூட அக்கறைப்படுவதில்லை. பொழுதுபோக்கிற்காகப் படிக்கிறவர்கள், அன்ருட அலுவல் களின் சிரமத்திலிருந்து சும்மா ୫୯୭ மாறுதலுக்காகப் படிக்கிறவ ர்கள் துாக்கம் வருவதற்காக எதையாவது படிக்கிறவர்கள் - இப்படி எத்தனையோ ரகங்கள். கண்டதை எல்லாம் படித்துப் படித்து தான் ருசி வளர்கிறது. சிறிது சிறிதாக நல்ல விஷயங்களைத் தேடி, தரம் அறிந்து படிக்கக்கூடிய பக்குவம் உண்டாகிறது. இந்த விதமாக ரசனைத் தேர்ச்சி பெற்றவர்களில் பலர் கூட, இன்றையப் பத்திரிகைகளில் பயனுள்ள விஷயங்கள்