உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எழுத்தாளர் துணைவன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

– 9 –

உலகத்திற்குச் சில பல அரும்பெருங் கருத்துக்களை அள்ளி வழங்கக் கூடிய வாய்ப்பு யாருக்கு வரக்கூடாது? எவர்க்கும் வரலாமே! அதனால் எல்லோரும் எழுத்தாளராகத் திகழவேண்டியது இன்றியமையாத்து தானே!

உலகிற்கு ஒன்றும் உணர்த்த வேண்டியதில்லை; உள் நாட்டிலேயே ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்குக் குடும்பச் செய்தி பற்றியோ, வாணிகம், அரசியல், சமூகம் முதலியவை பற்றியோ, கடிதமாயினும், அறிக்கை யாயினும் எழுதி யனுப்ப வேண்டும் என்றே வைத்துக் கொள்வோமே! அதனையாவது முறையாக; ஒழுங்காகப் பிழையின்றி எழுதத் தெரிய வேண்டாமா? பிழையின்றி எழுதுதல் என்றால் எழுதுதற்குரிய இலக்கண விதிப்படி எழுதுதல் ஆகும். எனவே, எழுத்தாளர் இலக்கணத்தை முன்கூட்டி ஒவ்வொருவரும் அறிந்திருந்தால்தானே பிழையின்றி எழுதமுடியும்.

இலக்கணம் இன்றியமையாததா?

'இலக்கணவிதி தெரியாமற் போனாலென்ன? பீழையாக எழுதினால்தான் என்ன? ஏறக்குறையக் கருத்தைத் தெரிவித்தால் போதாதா? என்ற வினாக்கள் எழுப்பப்படலாம்.

உலகில் எந்த மொழியினையும் பிழைபடப் பேசுவதாலும் எழுதுவதாலும் உண்டாகும் கேடு (நஷ்டம்) சொல்லுந்தரத்ததன்று. எடுத்துக்