பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா


சுப. நாராயணன் எழுதிய கவிதை'கலை, விமர்சனம் அ.முத்துசிவம் எழுதிய ‘கவிதை ஆகிய இரண்டும் சொல் லத்தக்கவைகள். எஸ்.வையாபுரிப்பிள்ளையின் இலக்கியச்சிந்தனைகள் மற்றும் சில புஸ்தகங்கள், நியாயத்துக்கு இசைந்த ஒரு குறிப்புப் பார்வையும் மன விலாசமும் கலந்த அறிவுடன் எழுதப்பட்ட பாண்டித் யத்தை காட்டுவனவாக உள்ளவை. தமிழ் இலக்கிய மாணவர்கள் படித்தாக வேண்டியவைகள். இந்தக் காலத்து நூல்களில் சிறந்ததான, சிதம்பர ரகுநாதன் எழுதிய இலக்கிய விமர்சனம்’ என்ற புஸ்தகம் சற்று அடவாதமாகச் சொல்வதாக அமைந்திருந்தாலும், அதன் துணிச்சல், இலக்கியப் படைப்பு சம்பந்தப்பட்ட உண்மைக்கு முன்னே முகம் காட்டுமாறு ஒருவரைக் கேட்கிறது.


கௌமாரி

சாலிவாஹனன்

மோகக்கண் கருவிழியே மோஹந் தவிர்ந்து விடும்
முத்தமிடாக் கனியிதழே முத்தங்கள் சிந்திவிடும்
தேகத்திளங் கனலே தாகத்தவிப் படங்கும்
திகட்டாத சுவைமதுவே தனிமையிலே மெய்சிலிர்க்கும்
மதுக்கலயம் உடலிதிலே சுவைத்தேலாக் கரும்பாவாய்
மணம்பரப்பும் உயிர்நறவம் சூக்குமத்தின் உருவாவாய்
எதற்காகத் தேக்கிவைத்து பவங்கடந்த சிவசக்திப்
ஏங்குகிறாய் இளநலமே? பாலனத்தின் நிரைவாவாய்
உயிர்வருடத் திளவேனில் மண்ணின்பக் காமமெலாம்
ஒளிமின்னும் ஒர்கணந்தான் மானிடாமா பாடுமவள்
மயற்பவள மாதுளையே உண்ணின்றிங் காடுகிறாள்
மனத்தாசை மறைத்திடலேன்? உமையவளே யிளங்குமரி
- (மோகக்கண்)
‘யோகம்’ என்ற காவியத்திலிருந்து



சென்ற இருபது ஆண்டுகளாக கவிதைகளும் கதைகளும் எழுதி வரும் சாலிவாஹனன் என்ற வி.ஆர். ராஜகோபாலன் 1918ல் ராமனாதபுரம் ஜில்லா விசாலையங்கோட்டை என்ற ஊரில் பிறந்தவர். கலாமோஹினி என்ற சின்ன இலக்கிய பத்திரிகையை நடத்தியவர். அவரது கவிதைகள், கதைகள் எதுவும் புஸ்தகமாகவரவில்லை. சில மொழி பெயர்ப்புக்கள் செய்திருக்கிறார். தற்போது சென்னை சர்க்கார் காதி டைரக்டருக்கு பிரசுர உதவியாளராக சென்னையில் வேலை பார்த்து வருகிறார்


100