பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

செய்து காண்பிக்கிறேன் என்று கூறினார். இந்த சம்பாஷனையினால் மாமிக்கு முகத்தில் எந்த விதமான சலனமும் ஏற்படவில்லை. வழக்கமான புன்னகையுடன் என்னைப் பார்த்து உட்காரும்படி சைகை செய்தார்.

ருசியாக சாப்பிடுவதில் அவருக்கு அந்த வயதிலும் நாட்டமிருந்தது. ஆனால் எதையும் அளவிற்கு மேல் அதிகமாக சாப்பிடமாட்டார். ஆடம்பரம் அறவே பிடிக்காது. 4 முழம் கதர்வேட்டி அரைக்கை கதர்சட்டைமேல்வஸ்திரம் கையில் கைத்தடி இதே கோலம் தான். எந்த நிகழ்ச்சியானாலும் கலந்து கொள்வார். எழுத்தாளர் வர்க்கத்திற்கே உரிய வெற்றிலைப் பாக்கு புகையிலை, பொடி எந்தப் பழக்கமும் அவருக்கு இல்லை.

பிறர்களுடைய கருத்துக்களை கேட்பார். அவருக்கு சரிபட்டதை ஏற்றுக்கொள்வார். அதே மாதிரி தன் கருத்துக்களை பிறருக்கு திணிக்கவும் மாட்டார். தனக்கு ஏற்பு ஆகாத பிறருடைய கருத்துடன் சமரசமும் செய்து கொள்ள மாட்டார்.

இதே மாதிரிதான் சொந்த வாழ்க்கையிலும் பெங்களூரில் தன் மகன் ஏற்பாடுசெய்திருந்த எல்லாவசதிகளுடன் இருக்கும் (பெட்ரூம் அட்டாச் பாத்ரூம்) வீட்டில் அவருக்கு இருக்க முடியவில்லை. கொஞ்சகாலம் இருந்து விட்டு, ரூபாய் இரண்டாயிரம் வாடகையில் சென்னைக்கே வந்து விட்டார். தானும் மனைவியும் இரண்டே பேர்கள் தான். வரும் நண்பர்களுக்கெல்லாம் என் கடையிலிருந்து சிற்றுண்டி. மனைவி தேனீர் போட்டுக்கொடுப்பார்கள். (இந்த கால கட்டத்தில் தான்தன்னுடைய ஒரே பேரனுக்கு உபநயனம் (பூணூல்) தான் ஜீவிய வந்தனாய் இருக்கும் பொழுதே போட்டு விட ஆசைப்பட்டார். பெங்களுரில் இருக்கும் மகனுக்கு விவரமாய் எழுதினார். சென்னை திருவல்லிகேணியில் உள்ள பண்ட் கல்யாண சத்திரத்தில் அவர் செலவிலேயே வைதீக முறைப்படி உபநயனம் செய்வித்தார். இதற்கு மூல காரணம் என் கருத்துப்படி.

இவர் தினமணியில் உதவி ஆசிரியராய் இருந்த போது திருவல்லிக்கேணி பிள்ளையார் கோவில் தெருவில் 22 எண் உள்ள வீட்டில் தான் குடியிருந்துவந்தார். சுமார் இருபது ஆண்டுகாலமாக இருந்ததுமல்லாமல் தன்னுடைய ‘எழுத்து’ பத்திரிகை பிறந்த வீடு இருந்த பகுதி. எல்லாப் பத்திரிகை நண்பர்களும் எழுத்தாளர்களும்

119