பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

கவிதையை நாம் ராகம் போட்டுப்பாடியா அனுபவிக்கிறோம்? அவர்களுடைய ராகத்தைப் போட்டுப் பாடினால்தான் அது நன்றாக விளங்கும் என்று சொல்ல யாராவது முன்வருவார்களா?

பொதுவாகக் கவிதைக்கு, எந்த பாஷையிலிருந்தாலும் சரி, ஒரு தனி ராகமும் தாளமும் இருக்கின்றன. அதை அனுபவிக்க கர்நாடக சங்கீதத்தின் ஒத்தாசையோ, ஹிந்துஸ்தானி சங்கீதத்தின் ஒத்தாசையோ, ஐரோப்பிய சங்கீதத்தின் ஒத்தாசையோ வேண்டியதேயில்லை. கவிதையின் ராகம் உள்ளத்தில் கிளம்புகிறது; ஹிருதயம் தாளம் போடுகிறது.

Wee see Heaven in a wild flower

And Eternity in a grain of sand

என்ற சித்தவாக்கை அனுபவிக்க நாம் ஐரோப்பிய சங்கீதத்தை கற்க வேண்டியதில்லை.

புல்லினில் வைப்படைதோன்றுங்கால்


என்பதை அனுபவிக்க காம்போதி ராகமா வேண்டும்?

நமது விழிகளிலே மின்னல் பிறந்திடுக! நமது பாட்டு மின்னலுடைத்தாகுக! என்ற மகாவாக்கு கவிதை ஆக எந்த சங்கீதத்தின் உதவி கேட்க வேண்டும், கேட்கிறேன்?”

என்கிற கு.ப.ராவின் இந்தக் கட்டுரைதான் - எழுத்து 14ஆவது இதழிலிருந்து தன்னைப் புதுக்கவிதை வளர்ச்சிக்காகவே அர்ப்பணித்துக் கொள்ளத் தூண்டுகோலாக விளங்கிய கட்டுரை!

எழுத்து ஐந்தாவது இதழில் கு.ப.ரா வின் வசன கவிதை போற்றும் கட்டுரையோடு எதிர்ப்பக்கத்தில் கு.ப.ரா எழுதிய ஐந்து கவிதைகளை (கலா மோஹினியிலிருந்து) மறுபிரசுரம் செய்திருக் கிறார் செல்லப்பா.

வசன கவிதை பற்றி கு.ப.ரா எழுதிய கட்டுரையோடு அவர் எழுதிய கவிதைகளையும் படிக்க வசதி செய்து கொடுத்ததின் மூலம் - கு.ப.ரா வின் கவிதை படைக்கும் ஆற்றலையும் வாசகர்களின் பரிசீலனைக்கு வைத்திருக்கிறார் சி.சு.

ஐந்தில் ஒன்று பெண்ணின் பிறவி ரகசியம் என்பது.

156