பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

வசன கவிதையையும் ஏன் எழுதினார். காட்சிகளையும் யாப்பிலக்கண முறையிலேயே எழுதியிருக்கக் கூடாதே?

மேற்சொன்ன ரசிகர்களுக்கு பயந்து பாரதி - காட்சிகளை யாப்பிலக்கணமுறையில் எழுதியிருந்தால் கவைக்குதவாமல் போயிருக்கும். காட்சிகள் யாப்பிலக்கண முறையில் அமையாததால் தான் அவ்வளவு சிறப்பும் அழகும் வேகமும் கொண்டிருக்கின்றன. யாப்பிலக்கணங்களுக்குக் கட்டுப்பட்டு வரும் கவிதையும் உண்டு. அதற்குக் கட்டுப்படாமல் வரும் கவிதையும் உண்டு. கவிதை என்ற வஸ்து நேரிசை - நிரையிசையில் மட்டுமில்லை. அவை ஒழுங்காக இருந்தால் மட்டும் கவிதை வந்துவிடாது. கவிதை என்பது நடை மட்டுமல்ல; கருத்தும் இருக்க வேண்டும்.

செவி நுகர் கவிதை என்று கம்பன் சொன்னதைக் திரித்து செவி நுகர்வது தான் கவிதை என்று கொள்வது தப்பு: கவிதை செவிநுகர்வதாக இருக்கவேண்டும் என்பதுதான் பொருள். செவி நுகர்வதெல்லாம் எங்காவது கவிதையாக முடியுமா? கவிதையெல்லாம் செவிநுகர்வதாக இருக்கும் நிச்சயம்.

வசன கவிதையைச் செவிநுகருமா என்றால் நுகரும்; ஏனென்றால் வசன கவிதைக்கும் யாப்பிலக்கணம் உண்டு. அதிலும் மாவிளங்காய், தேமாங்கனி எல்லாம் வந்தாக வேண்டும். வரும் வகை மட்டும் வேறாக இருக்கும். அவ்வளவுதான். வசன கவிதைக்கும் எதுகை, மோனைகட்டாயம் உண்டு. ஏனென்றால் இந்த அலங்காரங்களை எல்லாம் உண்டாக்கியது கவிதை; இலக்கணமல்ல. அது அவற்றை இஷடம் போல், சமயத்திற் கேற்றவாறு மாற்றிக் கொள்ளும். முதலில் உண்டாக்கினபடியே இருக்க வேண்டும் என்றால் இருக்காது. இலக்கியம் கூறுவதுதான் இலக்கணம். இலக்கணம் கூறுவது இலக்கியமாகவே முடியாது. கவிதை எல்லாம் நன்னூல் யாப்பிலக்கணத்தையொட்டியே இருக்க வேண்டுமென்று இலக்கணம் பிடிவாதம் செய்தால் நடக்காது. நன்னூலுக்கும் மேலான ஒரு புதுநூலை இலக்கியத்தின் போக்கிற்கொப்ப (இலக்கணம்) தயாரித்துக் கொள்ள வேண்டும்.

காம்போதி ராகம் போட்டுப் பாடவருவதுதான்கவிதை என்று யாராவது வாதித்தால், அவர்களுக்குக் கவிதை இன்ன தென்றே தெரியாது என்றுதான் நாம் பதில் சொல்ல வேண்டும். ஆங்கிலக்

155