பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா



பிச்சமூர்த்திக்கு முன்பே வசனகவிதை - புதுக் கவிதையை மரபுக் கவிதைகளுக்கு இணையானதாக உயர்த்தி - ஒப்பிட்டுக் காட்டிய கு.ப.ராவின் ‘வசனகவிதை’ என்ற அந்தக்கட்டுரை இன்னும் புதுக்கவிதை படைப் பாளிகளின் வாளாகவும் கேடயமாகவும் இருக்கிறது. அது வருமாறு :-

“வசன கவிதையை ஏளனமாகப் பேசுவது இப்பொழுது இலக்கிய ரசிகர்களிடையே’ பாஷன்.

‘அதென்ன வசன கவிதையா? இப்பொழுது யாப்பிலக்கணம் தெரியாதவர்களெல்லாம் இப்படி ஆரம்பித்து விட்டார்கள். வாய்க்கு வந்ததை எழுதி வசன கவிதை என்கிறார்கள்” என்று ஒரு சிலர் கேலி.

‘வசன கவிதை புதிதொன்றுமில்லை. பண்டைத் தமிழில் இருந்ததுதான் அது. அகவல் வசன கவிதைதானே? இவர்கள் என்ன புதிதாகக் கண்டு பிடித்து விட்டார்கள்?’ என்று மற்றும் சிலர் தாக்குதல்.

வேடிக்கை என்னவென்றால் எதிர்ப்பவர்கள் இருதரப்பினராக இருக்கிறார்கள். ஒருவர் ஆட்சேபனை மற்றொருவரது போல் அல்ல. ஒருவர் வசன கவிதையே கூடாது என்கிறார். மற்றவர் அது புதிது என்று சொல்லக்கூடாது என்கிறார். விசித்திரம்தானே இது? யாப்பிலக்கணம் தெரியாததால் வசன கவிதையைப் பிடித்துக் கொண்டார்கள் அதை எழுதுகிறவர்கள் என்றவாதம் சுத்த அசட்டுத்தனத்தை தவிர வேறொன்றுமில்லை. எழுதுகிறவர்களுக்குத் தேவையானால் யாப்பிலக்கணத்தைக் கற்றுக் கொள்ள எத்தனை நாழிகைகள் ஆகும்? அதென்ன அப்படி எளிதில் கற்றறிய முடியாத வித்தையா? தமிழ்ப் பண்டிதருக்கு வருவது கவிதை எழுத முனைகிறவனுக்கு வராமல் போய்விடுமாஎன்ன? அப்படிப்பட்டபிரம்மவித்தை ஒன்றுமில்லை. அது நிச்சயம். யாப்பிலக்கணத்தைப் படிக்காமல் கூட கண்களை மூடிக் கொண்டு செய்யுள் பாடலாம் அது கிடக்கட்டும் வால்ட் விட்மனும் எட்வர்ட் கார்ப்பென்டரும் ஆங்கில யாப்பிலக்கணம் கற்றறியத் தெரியாமல் தான் வசன கவிதை எழுதினார்களோ? புது யாப்பிலக்கணமே ஏற்படும்படி வங்காளியில் பாக்கள் பாடிய ரவீந்திரர்கடைசிக்காலத்தில் வங்காளியில் வசனகாவியத்தில் எழுதித் தொலைத்தார். அதுதான் போகட்டும் என்றால், சுப்பிரமணிய பாரதி யாப்பிலக்கண முறையில் ஏராளமாக எழுதியவர் காட்சிகள் என்ற

154