பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

பேருக்குமே சுதந்திரப் போராட்டத்தை அடிப் படையாகக் கொண்டு ஒரு பெரிய நாவலை நான்கு பாகங்கள் மூன்று பாகங்களில் எழுத வேண்டும் என்ற ஆசை இருந்ததைத் தெரிவிக்கிறது.

"காலை 8 மணி முதல் 11 வரை பேசிக் கொண்டிருப்போம். அப்போது தாம் செய்து வந்த வேலை பற்றியும் மற்ற பலபல விஷயங்களையும் பற்றி எடுத்துரைத்து விட்டு ஒரு நல்ல திட்டம் போட்டிருக்கிறேன் தெரியுமா என்றார் புதுமைப்பித்தன். பிறகு அந்தத் திட்டத்தை விவரித்தார்.

“சுதந்திர ஆர்வ ஆரம்ப நாட்கள் முதல் 1942 ஆகஸ்ட் புரட்சி முடிய உள்ள தேசிய அரசியலைப் பின்னணியாகக் கொண்டு நாலு பாகங்களில் ஒரு நாவல் எழுதப் போவதாகத் தெரிவித்தார். அதை அவர் பிறகு எழுதுவதற்கு முயற்சியாவது செய்தாராஎன்பது எனக்குத் தெரியாது. அதற்குப் பிறகு நாங்கள் சந்திக்கவில்லை" என்கிறார் பி.வி.சுப்ரமண்யம்.

புதுமைப்பித்தன் தமது திட்டப்படி சுதந்திரப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட நாவலை எழுதவில்லை. ஆனால் செல்லப்பாதமது இறுதிக்காலத்தில் 'சுதந்திர தாகம்’ என்ற பெயரில் மூன்று பாகங்கள் ஏறத்தாழ ஆயிரம் பக்கங்கள் கொண்ட நாவலை எழுதிவிட்டுத்தான் தமது இலக்கிய யாத்திரையையும் வாழ்க்கைப்பயணத்தையும் முடித்துக்கொண்டார்.

‘எழுத்து' ஏழாவது இதழில் ஒரு விசேஷ அம்சம். செல்லப்பாவின் ஜீவனாம்சம் என்ற நாவல் இந்த இதழில்தான் தொடர்கதையாக ஆரம்பம்ஆகி இருந்தது.

168