பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

ஒரு சாதனையை அவர் காட்டிவிட்டார் என்று யாரும் ஒப்புக்கொள்கிறார்கள்" என்கிறார் செல்லப்பா.

இந்த இதழின் இன்னொரு பக்கத்தில் புதுமைப்பித்தன் தனது நடை பற்றிக் கூறியதை தனியாகப் பிரசுரித்திருக்கிறார் சி.சு.செ

“கருத்தின் வேகத்தையே பிரதானமாகக் கொண்டு வார்த்தைகளை வெறும் தொடர்பு சாதனமாக மட்டும் கொண்டு தாவித்தாவிச்செல்லும் நடைஒன்றை நான்அமைத்தேன். அது நானாக எனக்கு வகுத்துக்கொண்ட ஒரு பாதை. அது தமிழ் பண்புக்கு முற்றிலும் புதிது. அதைக் கையாண்ட நானும் கல்வி கற்றதின் விளைவாக பாஷைக்குப் புதிது. இதனால் பலர், நான் என்ன எழுதுகிறேன். என்பது பற்றிக் குழம்பினார்கள். சிலர் நீங்கள் எழுதுவது பொதுஜனங்களுக்குப் புரியாது என்று சொல்லி அனுதாபப்பட்டார்கள். அந்த முறை நல்லதா கருத்து ஓட்டத்துக்கு வசதி செய்வதா என்பதை அதே முறையில் பலர் எழுதிய பின்புதான் முடிவுகட்ட முடியும் " என்று தமது எழுத்து நடை பற்றிப் புதுமைப்பித்தன் விளக்கம் அளித்திருக்கிறார்.

செல்லப்பாஅடிக்கடி கையாளும் சோதனை முயற்சி, சோதனை என்ற சொற்களைக்கூட புதுமைப்பித்தன் விரும்பிக் கையாண்டிருக்கிறார். சோதனை செய்து பார்க்கப்பெரிதும் விரும்பியிருக்கிறார் என்பதை கு. அழகிரிசாமி இந்த ஏட்டில் எழுதியுள்ள 'புதுமைப்பித்தன் சொன்னவை' என்ற கட்டுரையில் உள்ள ஒரு தகவல் எடுத்துக் காட்டுவதாக இருக்கிறது.

“என்னையும் ரகுநாதனையும் உதவியாசிரியர்களாகக் கொண்டு அவர் ஆரம்பிக்க உத்தேசித்திருந்த பத்திரிகை ‘சோதனை' என்ற பத்திரிகை. அதில் வெளியிடும் ஒவ்வொரு சிறுகதைக்கும் நூறு ரூபாய் சன்மானம் கொடுக்க வேண்டும் என்று அவர் சொல்லிக் கொண்டார். ஆனால் சோதனை வெளிவரவில்லை. அதற்கு பதிலாக எங்கள் மூவருடைய தனித்தனி வாழ்க்கையிலும் ஏற்பட்ட சோதனைகள் போதும் என்று ஆகிவிட்டன"

- என்று குறிப்பிட்டிருக்கிறார் கு. அழகிரிசாமி

சொ.வி பற்றி பி.வி.சுப்ரமணியம் எழுதிய கட்டுரையில் 767 இன்னொரு தகவல் புதுமைப்பித்தன், செல்லப்பா ஆகிய இரண்டு

167