பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

அவமதிக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு- எல்லாவற்றையும் விட அதிகமான அளவில் ஆனதாக இன்றைய காலகட்டத்தில் பிரதான இடம் வகிப்பதைப் பார்க்கிறோம்.

கருத்துக்கள் - விமர்சனங்கள் எப்படியும் இருக்கட்டும், இன்றைய சிற்றிதழ்கள் செல்லப்பாவின் எழுத்தைப் போல அல்லாமல் அதிக அளவில்10 ஆயிரம் 20 ஆயிரம் என்பது அளவிலாவது வாசகர்களைப் பெற்றிருக்கிறதா என்று பார்த்தால் - எல்லாச் சிற்றிதழ்களின் ஒட்டு மொத்த விற்பனையைக் கூட்டிப் பார்த்தாலும் 20 ஆயிரம் பிரதிகள் விற்கின்றனவா என்பது சந்தேகத்துக்குரியதாகவே இருக்கிறது.

ஆகவே செல்லப்பாவின் 'எழுத்து' முயற்சி தோற்று விட்டதாகக் கருத இடமில்லை. இன்று ஏராளமான சிற்றிதழ்கள் செல்லப்பாவின் எழுத்து போலவே சிறந்த படைப்புகளுடன் சிறந்த விமர்சனங்களுடன் வருகின்றன. செல்லப்பாவின் ஏட்டை விட இப்போதுவரும் சிற்றிதழ்களின் அட்டையும், அச்சும் வடிவமைப்பும் அச்சிடப்படும் காகிதமும் அற்புதமாக இருக்கிறன்றன! என்றாலும் சிற்றிதழ்களின் எண்ணிக்கை மட்டும் - அதனை நடத்திக் கொண்டிருப்பவர்களே மகிழ்வடையும்படியாக இல்லை என்பது எதைக்காட்டுகிறது? நல்ல ஏடுகள், நல்ல இலக்கியம் வளரவேண்டும் என்று ஆசைப்படுகிற வாசகர்கள் -படைப்பாளிகள் - ஏடு நடத்துவோர் அனைவருமே சிந்தித்து விடைகாண முன்வர வேண்டும்.

மற்றபடி இந்த அத்தியாயத்தை எழுத்துக்கு பத்துவயது நிரம்பியபோது 1959-1968 என்ற தலைப்பிட்டு செல்லப்பா எழுதிய தலையங்கத்தை சுட்டிக்காட்டி நிறைவு செய்வது பொறுத்தமாக இருக்கும். செல்லப்பாவும் தனது ஏட்டின் பத்தாண்டுக் காலத்தை அதன் நிறை-குறைகளை வாசகர்கள் தான் சரியாக கணித்துக் கூறமுடியும் என்று குறிப்பிட்டிருக்கிறார். அந்தத் தலையங்கம் இன்றுசிற்றிதழ் நடத்துவோர்-'சிற்றிதழ்களில்தங்களது படைப்புகள் வருவதைப் பெருமையாகக் கருதும் படைப்பாளிகள் சிற்றிதழ்களை விரும் பி-வாங்கிப்படிப்பதால் நான்மற்றவாசகர் களைவிட இலக்கியப் பரிச்சயத்திலும் இலக்கியங்களில் தோய்வதிலும் சற்று வித்தியாசமானவன்; உயர்ந்தவன் என்று கருதுகிற விஷயஞானம்

183