பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்



ஒலி பரப்பும்
ஒரு குழந்தை
ஒளி வீசும்
ஒரு குழந்தை
ஒலி ஒளியைப்
படமாக்கும் இரட்டையர்கள்.
நிலம் நடுங்க
தாள் பதியும்
மார்மப்பிள்ளை?
ஒயாமல் காலத்தை
ஒட்டிக் காட்டும்

முள்ளுக்கைப் பிள்ளை..
பிள்ளை பெற்ற பெருமையிலே
இருந்த பெண்னாள்
பெயர் வைக்க வந்த
விஞ்ஞான சாஸ்திரியைப்
பார்த்தாளா?
நானறியேன்.

(எழுத்து 53)

நல் முத்து பற்றிய 'கண்‘ என்ற கவிதையும் ரசமானதுதான். நல்முத்து 'ஆழ்கடல் வயிறு அவனிக்களித்த-அற்புதப்புதையலோ?' கடலின் சிப்பிக் கண்ணுள் துசோ எதுவோ நுழைந்ததனால் சேர்ந்த துன்பச் சேமிப்போ, என்றெல்லாம் சிந்திக்கிற கவியின் வியப்பு இப்படி வளர்கிறது-

இல்லை இல்லை
துன்பம் எங்கேனும்
விண்ணில் போல் மின்னி
மாந்தர் கை சேர்ந்து
அரம்பையர் விரும்பும்
அணிகலனாமா?
விலை மலையாய்ப் போமா?
கண் தான் காட்சியா?
இல்லாவிட்டால்?

257