பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா


மேற்கு அப்படி ஆகி விட்டதால் கிழக்கு வாழ்வும் அப்படி ஆகிவிட வேண்டுமா? கிழக்கு படைப்பும் அதேபோல ஆகிவிட வேண்டுமா? பாரதம் கிடக்கட்டும் தமிழ் நாட்டை கவனிப்போம். அறுபதுக்களில் ஒருவன் படைத்த கதைகள், நாவல்கள், கவிதைகள், சினிமாபாட்டுக்கள் இவைகளை ஒருவன் நினைத்துப் பார்க்கட்டும். ஏழ்மையின் கொடுமையை, சித்தரிக்கட்டும். மனிதகுல முன்னேற்றம் நோக்காகக் கொண்டு அறப்போர் நடத்தட்டும். ஆனால் அறப்போருக்கு ஆயுதமாக புதுக் கவிஞன் சொல்வது போல அரம் எடுத்து ஓடுபவனாக எல்லாத்தையும் ராவிப்பொடியாக்கும் மரபு, பண்பு, மனிதாபிமான ஆன்மிக விநாசகனாக அகிவிடுவானானால்!

அன்பு அகிம்சை, சத்யம், சமாதானம் இவற்றிற்கு சின்னமானது வெண்மை, கலைத்தெய்வம் வெள்ளைத்தாமரை பூவில் இருப்பாள். வள்ளலார் ராமலிங்கசுவாமி அணிந்திருந்தது காவியல்ல. வெள்ளாடை. ஆக அந்த தூய புனித வெண்மைக்கு உலைவைக்க ஓடுபவனாக 'கட்டிடம் கட்டவரும் கடப்பாரையை ஆயுதமாக்காதே, ரத்தத்துளியைப் போர்கொடியின் ஊடும்பாவும் என்று ஆக்காதே’ புதுக்கவிஞன் பாடி இருக்கிற மாதிரி 'இன்னும் சிவப்பாகும்' என்று ரத்தப் பசிகொண்டு பிரம்ம ராக்ஷசனாக மாறிவிடக்கூடாது மானிடம். இன்று உலகு எங்கும் காண்பது வேறு என்ன? உலகம் அப்படி இருக்க யதார்த்தம் என்று இலக்கியத்திலேயும் இந்த சிவப்பை பூசி மனிதரத்தத்தையே கொதிக்கிச் செய்ய முற்படுவதுதான் 'உலகைத் திருத்தும் உத்தமச் செய்கை'யா?

சிவப்பின் மிரட்டல் ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கத்தில் பச்சையின் விரட்டல். இதுவும் மேற்கே இருந்து கிடைத்த பிரசாதம் நமக்கு - அறுபதுக்களில். சென்ற யுத்தம் மேற்கத்திய மனிதனின் பொருளாதார வாழ்வை சீர்குலைந்து நிலைப்பிடத்தை ஆட்டி விட்டது போல ஆன்மிக தூய்மைக்கும் வேர்ப்புழு விஷம் செய்து விட்டது. இதுவரைதான் கடைப்பிடித்திருந்த வழிகள், வைத்திருந்த மதிப்புகள் சோதனை கட்டத்தில் தன்னை காப்பாற்றவில்லை என்று உணர்வு ஏற்படக் கூடும் ஒரு தொல்லையில் சிக்கலில் மாட்டிக் கொண்டு மீட்சிக்கு வழியில்லாமல் மனிதன் தடுமாறுகிற நிலையில்,

274