பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

கொண்டு போனான். அந்த அதிர்ச்சியால் அவள் குடையும் புத்தகங்களும் கீழே விழுந்தன. அவைகளைப் பொறுக்க கீழே குனிந்தாள். அவள்புடவை சரிந்து விழுந்தது. உடனே சரிப்படுத்திக் கொண்டு நிமிர்ந்து பார்த்தாள். அநேக கண்கள் அவள் பக்கம் திரும்பி இருந்தன. அவள் உடம்புகன்றிக் குறுகிப்போயிற்று. அவமானமும் துக்கமும் பொங்கிக் கொண்டு வந்தன. அவர்கள் பார்த்த பார்வை அவளுடைய ஆண் எண்ணங்களைத் துளைத்துச் சென்று அவள் உள்ளத்தில் பாய்ந்து பெண்மையையே தாக்குவது போலிருந்தது. அவளுக்கு அப்பொழுது ஏற்பட்ட மனக் கொதிப்பில் வெகு நாளையஅவளுடைய எண்ணங்கள் பொசுங்கி, பஸ்பமாகிப் போய்விட்டன.”

நான் மேலே குறிப்பிட்ட மூன்று தன்மைகளை இந்த மாதிரி பாராவில் காணலாம். ஆக, வேலையும் விவாகமும் , டஜன் கணக்கில் சிறு கதை வளம் பெருக ஆரம்பித்த காலத்து சிறந்த கதை மட்டுமின்றி நூறு, ஆயிரக்கணக்கில் சிறு கதைகள் வந்து கொண்டிருக்கிற இநதக் காலத்துக்கும் சிறந்த கதை. இந்த கதை செலுத்திய பங்குக்குப் பின்நான் பார்க்க விரும்பும் கதை ‘பைத்தியக்காரி' என்பது. இந்த கதையை எழுதியவர் தி.ஜ.ர. என்ற தி.ஜ.ரங்கநாதன்.


சந்தேகம்


வல்லிக்கண்ணன்

முழு நிலவே, ஒளி முகமே!

அமுத ஊற்றே அம்புலியே!

வட்ட நிலா எழில் வதனி பள்ளமும் மேடும் என்றெல்லாம் புலம்பினர் கவிஞர். குண்டு குழிகளும், அகம் மகிழ்ந்து முகம் மலர்ந்தனை வறட்சிப் பரப்பாய் பெண்ணே ! விரிந்த தோற்றமும்

படங்களில் கண்ட பின்னும், வட்ட நிலா, முழு நிலவு சந்திர பிம்பம் சுந்தரவதனம் எனப் பல்வகை அளப்புகள் கேட்டிடில், வெறுப்பும் கோபமும் கொள்வையோ, அன்றிக் கிளுகிளுத்துச் சிரிப்பையோ, பெண்ணே?

காமிராக் கண்கள் கண்டு, காட்டின படமாய்ப் பிடித்து, நிலவின் தன்மைகள், அழகுகள் அம்பலம் ஆயின; பின்னர் - கண்ணாடியில் உன் முகம் கண்ட துண்டோ, பெண்ணே? என்ன தான் எண்ணினை அன்று?