பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

எப்படியோ கல்யாணிக்கு ஏற்பட்ட குறை சீக்கிரம் தீர்ந்து விட்டது. ஆறு மாதத்திற்குள் தாய்வீடு வந்துவிட்டாள். வேலைக்காக நாகராஜன் சென்னையில் நான்கு வருஷ காலம் அலைந்து கொண்டிருந்தான். ஏதோ ஆறு ஏழு மாதத்திற்கொருமுறை வருவான். உடனே போய் விடுவான். சில சமயங்களில் உண்மையில் அந்த நான்கு வருஷங்களில் இரண்டு முறை பத்து ரூபாய் வீதம் பணம் கூட அனுப்பி விட்டான்.

இதற்கிடையில் கல்யாணியின் தகப்பனார் இறந்து போனதற்கு வயோதிகமும் ஒரு காரணம்தான். அவளுடைய சகோதரன் ஒருவன் தான்சம்பாதிக்கும் வயது அடைந்திருந்தான். படிப்பு அதிகம் பெறாத நிலையில் ஒரு கடையில் அமர்ந்தது எவ்வளவோ அதிர்ஷ்டம். இன்னும் மூன்று பெண்கள்; கடைசி பையன். இவர்களுக் கிடையில் தான் ஒரு சுமையாக இருக்கிறோமென்ற பீதி கல்யாணியை நாளுக்கு நாள் வாட்டிக்கொண்டே இருந்தது. படித்து வேலைக்குப் போக வசதியும் இருக்கவில்லை. அந்த யோசனையும் பெற்றோர்களுக்கு இருந்ததாகத் தெரியவில்லை.

கல்யாணியின் பொறுமைக்கு தீவிர சோதனை ஏற்படுவதற்குள் நாகராஜனுக்கு ஒரு நல்ல வேலை கிடைத்து விட்டது. ஆனால் அடிக்கடி வெளியூர் போகும் வேலை. ஒரு பெரிய உத்யோகஸ்தருக்கு காம்ப் கிளார்க்காக முதலில் போட்ட உத்திரவை அவர்கள் இன்னும் மாற்றவில்லை. அந்த ஆபீஸருக்கும் நாகராஜன் மீது தான் நம்பிக்கை போலும். ஆகக்கூடி எது எப்படி இருந்தாலும் தனிக்குடித்தனம் செய்வது என்று கல்யாணி வந்துவிட்டாள். நாகராஜன் ஆபீஸ் திருமங்கலத்தில்தான். ஆனால் மதுரை ஜில்லா முழுவதும் அவன் ஆபீஸருடன் சுற்ற வேண்டியிருந்தது. கல்யாணியின் தாயார்வீடு நிலக்கோட்டையில்தான். ஆனால் இனி அங்கே இருப்பது கூடாது என்று கல்யாணி தீர்மானித்து விட்டாள்.

‘இப்போ என்ன பாட்டி அவசரம் அதுக்கெல்லாம்?’ என்று சற்று கோபமாகவே கல்யாணி கேட்டாள்.

‘அடி பொண்ணே, தூங்குறாய்ன்னு நெனச்சேனே. இப்போ இல்லாட்டா நாலுமாசம்கழிச்சுப் போகத் தானே வேணும்.'

63