பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

தன் வாழ்நாள் முழுவதும் பழமை யான தமிழ் காவியங்களை ரசித்து, ஆராய்ந்து, ஆராய்ச்சியும் செய்வதிலேயே ஈடுபட்டிருந்த ஒருவரது பேனாவிலிருந்து வரும் இந்த வரிகள் மறுக்க முடியாதபடி ஒன்றைக் குறிக்கின்றன. அதாவது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உரைநூல்வடிவில் கையாளப்பட்ட பழையவிமர்சன முறை (அதை ஒரு முறை என்று கூறக்கூடுமானால்!) அவர்கள் தகுதியானது என நினைத்த ஒரு சில மதிப்புக்களைப் புலப்படுத்துவதில் விசேஷ சிரத்தைகாட்டுவதோடுவரையறைபண்ணிக்கொண்டு விட்டதாகும் என்பதுதான். இப்படிச்செய்ததன் மூலம் ஒரு வித மன ஒடுக்கம், ஒரு பக்க மனச்சாய்வு, துரபிமானம் கூட உள்ள ஒரு அறிவை வெளிக் காட்டிக் கொண்டு விட்டார்கள், சென்ற காலத்து உரைஆசிரியர்களை விட்டு விடுவோம். இன்றைக்கும் கூட, தொன்மை நூல்களில் மேய்ந்து கொண்டிருக்கும் பண்டிதர்களும் பேராசிரியர்களும் கூட இந்த மரபை மிகுந்த விசுவாசத்துடன் காப்பாற்றி வருகிறார்கள். பழைய இலக்கியம், அவர்களுக்கு, கால நிர்ணயம் செய்யவே முடியாத நூல்களின் காலத்தை நிர்ணயிப்பதற்கு தங்கள் உரைவாட்களைமோதிக்கொள்வது, தங்கள் சரித்திர, இன ஆராய்ச்சிக் கோட்பாடுகளுக்குப் பொருந்தக் கூடிய அர்த்தங்களை தானே விளங்குகிற வார்த்தைகளுக்கு வர்ணம் கொடுப்பது, அக்காலத்து மக்கள் வாழ்க்கைமுறை பற்றிய மெய்ம்மைத் தகவல்களுக்காக துருவுவது போன்றவை களுக்கான களமாக இருக்கிறது. இந்தவித வாதமாடுதல்களைப் பற்றி, தன் தேசத்தவரைக் குறித்துக் கண்டித்து சொன்ன அமெரிக்க விமர்சகர் மால்காம் கெளலியின் வார்த்தைகளையே எதிரொலியாக எடுத்துக் காட்டத்தான் ஒருவருக்குத் தோன்றுகிறது.

”நமது படிப்புகள் ஒன்று உபயோகமற்றவை அல்லது தப்பு வழியில் போகிறவை - அதுவும் முக்யமாக நமது இங்கிலீஷ் இலக்கியப் படிப்புகள்.” -

ஆயினும், நாம் மேல் நாட்டிலிருந்து எடுத்துக் கொண்ட நாவல், சிறுகதை ஆகிய உருவங்களான வசன கட்டுக்கதைகளின் பரப்பைக் கண்ட சென்ற நூற்றாண்டுக் கடைசி சில பத்தாண்டுகள் இன்றைய இலக்கிய அபிப்ராய தோரணையை அடி எடுத்துக் கொடுத்தன. கவிதைத் துறையில் ஒரு படைப்பு நூலில் உள்ள சம்பிரதாய நியதி அம்சங்களுக்கு மட்டும் அளவு மீறிய முக்யத்துவம்

91