பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா



கொடுத்து வந்திருப்பவர்களால் பின்பற்றப்பட்டவைகளை விட முற்றிலும் மாறுபட்ட குணம் காணும் பார்வையை அது வேண்டியது. அன்று வெளியான இரண்டு புஸ்தக மதிப்புரைகளிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகள் பின்வரும் இரண்டும் :

சென்ற நூற்றாண்டு மதிப்புரை விதம்

....கதைக்கரு முழுக்கவும் வெகுநன்றாக தூக்கிப் பிடிக்கப்பட்டிருக்கிறது. ஏற்பட்ட நஷ்டங்கள் யாவும் ஒரே நாளில் சீராகிவிட்டன என்று முடிவு நோக்கி சற்று அவசரப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைத் தவிர, பலவகையாக உள்ள கதாபாத்திரங்கள் எல்லாம் கூரியதாகவும் வாழ்க்கைக்குப் பொருத்தமானதாகவும், அதுவும் ஒரு சில வரிகளில் தீட்டப்பட்டிருக்கின்றன. ஒரு சாமான்ய இந்து குடும்பக் கதைக்குத் தக்க வீச்சு ஆச்சர்யப்படத்தக்க விரிவு கொண்டு அமைந்திருக்கிறது. -- இவை எல்லாம் வெகு அழகாக பேதத்தைக் காட்டுகின்றன. ஒரளவுக்கு நாவலின் பரப்பை வெளித் தெரிவிக்கின்றன. நடை எளிமையாகவும், துயதாகவும்....

(பி.ஆர். ராஜமய்யர் எழுதிய கமலாம்பாள் சரித்திரம் நாவலுக்கு ‘பிரபுத்த பாரதா' 1897மார்ச் இதழில் இங்கிலீஷில் வெளியான மதிப்புரை.)

...பொதுவாக சந்தர்ப்பங்கள் நன்றாக ஆய்ந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆயினும் சோக தோரணை போதுமான அளவு வலியுறுத்தப்படவில்லை. கதாசிரியர்..... செய்திருந்தால், இன்னும் நேர்த்தியாக கலை நோக்குக்கு உபயோகப்பட்டிருக்கும். கதைக் கருவை வளர்த்துச்செல்வதில் ஆசிரியர் கணிசமான சிறப்பை வெளிக் காட்டி இருக்கிறார்; ஆனாலும் சுவாரஸ்யத்தில் அடிக்கடி குறுக்கிடும் யோசனைகள் விஷயத்தில் இன்னும் கொஞ்சம் அடக்கிக்கொள்ளும் சாமர்த்தியம் காட்டப்பட்டிருப்பின் சிலாக்யமாக இருந்திருக்கும். புஸ்தகம் இங்கும் அங்கும் ஒருவருக்கு டென்னிஸனை நினைவூட்டக்கூடிய மேன்மையான சாயைகள் நிறைந்து இருக்கிறது...

(அ.மாதவையாவின் 'பத்மாவதி சரித்திரம்' நாவலுக்கு 'பிரபுத்த பாரதா' 1898 மார்ச் இதழில் இங்கிலீஷில் புஸ்தக மதிப்புரை.),

92