பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| வல்லிக்கண்ணன் - - - - - ΟΕ5) கூர்காக்கள் சம்பளம் வாங்குவார்கள். ஆனால் மகளின் பங்களாவைக் காக்கவும், மாப்பிள்ளையின் அரண்மனையைக் காக்கவும் அந்தக் கூர்காக்கள் பயன்படுத்தப் பெறுவார்கள். ஆறு சமையற்காரர்களைக் காண்டின் ஊழியர்கள் - என்ற பெயரிட்டு ஆபிஸில் சம்பளம் கொடுத்து-வேண்டிய உறவினர்கள் வீட்டில் எல்லாம் அவர்களைத் திதி பொங்கவும், விருந்து பொங்கவும் அனுப்பிக் கொண்டிருப்பார்கள். - இந்தப் பக்கம் பத்திரிகைக்காகப் பாடுபடுகிற அச்சகத் தொழிலாளியும், புரூப் திருத்துகிறவர்களும், உதவியாசிரியர் களும் குடும்ப பாரத்தையும், நகர வாழ்வின் பகாசுரப் பணத் தேவையையும் தாக்குப் பிடிக்க முடியாமல் நலிந்து சீரழிந்து கொண்டிருப்பார்கள். அந்தப் பக்கம் பத்திரிகை அதிபர் அல்லது முதலாளி பெரிய பெரிய கார்களிலும் ஏர்க்கண்டிஷன் செய்த குளு குளு ரயில்களிலும், டெல்லிக்கும் பம்பாய்க்கும், கல்கத்தாவுக்குமாக விமானங்களிலும் பறந்து கொண்டிருப் பார்கள். இன்னும் சில தனிநபர் பத்திரிகை ஆலைகளில் ... ஸ்டோர்ஸ் ஸ்குரூட் நைஸிங் - புரூப் ரீடிங். என்ற பெயரில் அதிபர்களின் மைத்துணிகள், மருமகள்கள் வவுச்சரில் கையெழுத்துப் போட்டு 500,600 என்று வாங்கிக் கொண்டிருக்க, உண்மையிலேயே அந்தந்த வேலைகளை அந்தக் காரியலாயத்தில் செய்து கொண்டிருக்கும் அப்பாவி உதவியாசிரியர்கள் சில நூறும், இரு நூறும் கூலி வாங்கிக் குடும்ப இயந்திரத்தை நரகச்சாலையில் அந்தக் குறைந்த செலவில் ஒட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருப்பார்கள். இந்தியப் பத்திரிகைத் தொழிலிலும், என்னைப் போல் சக்திவாய்ந்த தனி நபர்கள் கூடக் கஷ்டப்படுவதற்கும் புறக்கணிக்கப்படுவதற்கும் ஒவ்வொரு விதத்திலே இந்த முதலாளிமார்களின் மேற்கண்ட அடிப்படை ஊழல்களும், சூழ்ச்சிகளும் காரணமாக முடியும். - எனது வேலையை நான் இழந்த இடத்தில் தர்மமும், சங்கராச்சாரியாரும் போற்றப்பட்டாலும் அங்கே இப்படி ஊழல்கள் மலை, மலையாக உண்டு. அந்த ஊழல்களை மறைக்கவே இந்த தர்மக் கூக்குரலும் சங்கராச்சாரியார் பக்தி வேஷமும் பயன்படுகின்றன. சிறுமை கண்டு பொங்குவதும் அசல் எழுத்தாளனின் ஆன்மீகக் குணங்களில் ஒன்று. அதை