பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| வல்லிக்கண்ணன் }. {95D காதல்கள் ஏழ்மைத் துன்பங்கள் திரும்பத் திரும்ப மெரினா கடற்கரையைச் சுற்றிவரும் தொடர்கதைகள் - இவைகளோடு தமிழ் எழுத்தாளன் அடங்கி விடலாமா? புத்தகப் பதிப்பும் விற்பனையும் புத்தகப் பதிப்பையும் அதன்விற்பனையையும் பொறுத்த வரை ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு என்னென்ன அசெளகரியங் கள் இருக்கின்றன என்பதை இனிமேல் கவனிக்கலாம். மாதக் கணக்கில் உறக்கம் விழித்து இராப்பக்லாக உழைத்து உருவாக்கிய ஒரு நாவலை அல்லது ஆராய்ச்சிநூலை-எந்தப்பத்திரிகையிலும் தொடர்ந்து வெளியிடாமல் நேரடியாக அப்படியே புத்தகப் பதிப்பிற்குக் கொடுத்துப்புத்தக் இலாபமும் பயனும் அட்ைகிற செளகரியம், மில்லியன் கணக்கில் புத்தக விற்பனை நடக்கிற அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிலுள்ள ஓர் எழுத்தாளனுக்கு உண்டு. தமிழ் எழுத்தாளன் ஒரு சிறந்த நாவலை உருவாக்கு வதற்குப்படுகிற சிரமமும் உழைக்கிற உழைப்பும், அந்த நாவல் பத்திரிகையில் தொடராக வெளிவந்து, அதன்மூலம் கிடைக்கிற ஊதியத்தால் நிவர்த்தியாகாததுடன் அதே நாவல்புத்தக வடிவில் பதிக்கப்பட்டுக் கிடைக்கிற ஊதியத்தினாலும் கூட கிடைப்ப தில்லை. வெளியிடுகிறவரைதான் அந்தச் சாமர்த்தியம் எல்லாம். விற்பனைத்திறன் அதாவது மார்க்கெட்டிங் எபிலிடி வேறு வகையானது. ஒடியாடி அலைந்து லைப்ரரி ஆர்டர்களை யும் பள்ளிக்கூட ஆர்டர்களையும் வாங்குவதற்குப் பாடுபட்டுக் கொண்டிருந்தால் எழுதும் திறனும் சிந்தனை ஆற்றலும் குன்றும். எனவே கற்பனா சக்தியும் சிருஷ்டித்திறனும் உள்ள வனான எழுத்தாளன் ஒருவன்தன்னுடைய புத்தகத்தைத் தானே வெளியிடும் சிரமத்தையும் அதன்அபரிமிதமான இலாபத்தையும் சேர்த்தே ஒரு பதிப்பாளரிடம் விட்டு விட வேண்டியிருக்கிறது. பதிப்பாளர் முதற்பதிப்பு ஆயிரம் பிரதிகள்-மூன்றாம் பிரதிகள் அதே ஆயிரம் பிரதிகள்-என்று சம்பிரதாயமாகச்சொல்கிற அந்த ஆயிரம் பிரதி உண்மைக்கே எழுத்தாளன் தன்னைத் தியாகம் செய்தாக வேண்டியிருக்கிறது. எவ்வளவு வேகமாகவும், சுறுசுறப்பாகவும், விற்றாலும் அந்த ஆயிரம் பிரதிகளும் விற்று முடியக் குறைந்தபட்சம் ஒருவருஷத்திலிருந்து ஒன்றே கால் வருஷம் வரை ஆகிறது. அப்படி விற்கிற விற்பனைத் தொகை யிலிருந்து எழுத்தாளனுக்குக் கிடைக்கிற பகுதியைக் கூட்டிக்