பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| வல்லிக்கண்ணன் H ( 7 ) இலட்சியமாக மட்டுமின்றி வாழ்க்கை இலட்சியமாகவும் இருந்தது. ஆம்: அவரது இறுதி நாள் வரை நீடித்தது என்பது நா.பா.வின் சிறப்பு. அவரது ஆளுமையின் முக்கியத்துவம். சாகித்ய அகாதமியின் தமிழ் மண்டலச் செயலராக அவர் இருந்த சில ஆண்டுகளில், சாகித்ய அகாதமிப் பரிசுகள் பெரும்பாலும் வாசகர்கள் ஏற்கத்தக்க வகையில் வழங்கப் பெற்றன. யார் யாருக்குப் பரிசு கிடைக்க வேண்டுமோ, தகுதியும், தரமும் இருக்கிறதோ அவர்கள் அனைவரும், குறிப்பாக மூத்த எழுத்தாளர்கள், பரிசு பெற நா.பா.காரணமாக இருந்தார் என்று குறிப்பிடலாம். நா.பா.வுடன் அடிக்கடி வல்லிக்கண்ணன் வீடு உள்பட பல இடங்களுக்குச் சென்னையில் சென்றிருக்கிறேன். சில காலம் தீபத்தில் அரும்பணி புரிந்த திருப்பூர்கிருஷ்ணனும், நா.பா.வும் ஆதம்பாக்கத்தில் எங்கள் இல்லத்திற்கு வந்து, ரசமான இலக்கிய உரையாடல்களில் ஈடுபட்டிருக்கிறோம். இவற்றையெல்லாம் விரிக்கிற் பெருகும். எனினும், நா.பா.வின் சுந்தரக் கனவுகள் நாவல் வெளியீட்டு விழாவுக்காக நண்பர் "விஜயா வேலாயுதத் தின் அழைப்பின் பேரில் நா.பா.வுடன் ரயிலில் கோவை சென்றதும், அங்கே இலக்கியக் கூட்டத்தில் அந்நூலை நான் திறனாய்வு செய்ததும், கோவை இலக்கிய நண்பர்களைச் சந்தித்துவிட்டு நாங்கள் இருவரும் ரயிலில் சென்னை திரும்பியதும், இன்னும் நினைவலைகளாக நீங்கா இடம் பெற்றுள்ளன. . மொத்தத்தில் நா.பா.வுடன் நான் மிக நெருங்கி உறவாடிய 1965-1987 கால கட்டம், மிக இனிமையானது. எங்கள் நட்புறவு, பரஸ்பரம் அன்பும், மரியாதையும், தோழமையும் நிறைந்தது. நா.பா.வின் மறைவு என் வாழ்வில் நிரப்பவே முடியாத ஒரு வெற்றிடம். அவரது நினைவுகள் என் உள்ளத்தில் என்றும் பசுமையாக இருக்கும். - --