பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(Tajಿಥೌ– - GD புதிதாக எழுதத் தொடங்கிய திறமைசாலிகளுக்கு (வண்ணதாசன், நாஞ்சில் நாடன், கே. ராமசாமி, மோகனன், பாஅமிழ்தன்போன்றோருக்கு) தீபம் வளர்ச்சிப்பாதை அமைத்துக் கொடுத்தது. வாசகர்களையும் இலக்கிய முயற்சிகளில் பங்கு பெறும்படி தூண்டிவந்தது தீபம் தரமான கடிதங்களுக்குப் பரிசு அளித்தது. படித்த புத்தகங்கள் பற்றி ரசனைக் கட்டுரை எழுதவும், தீபம்’ கதைகளை விமர்சிக்கவும், குறிப்பிட்ட சில புத்தகங்கள் குறித்து விரிவான விமர்சனங்கள் எழுதவும் வாசகர்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்தியது. - - - தமிழக நாடோடிக்கதைகள், பலநாடுகளின் குட்டிக் கதைகள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டன. திரைப்படம், நாடகம், அரசியல், சமூகப்பிரச்சனைகள், கலாச்சார விஷயங்கள்,விவசாயம், பல்வேறு தொழில் முயற்சிகளிலும் தீபம் கவனம் செலுத்தியது. அவை சம்பந்தமான தனிக்கட்டுரைகளையும் தொடர்கட்டுரைகளையும் அவ்வப்போது வெளியிட்டது. - இரண்டாவதுஉலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டில், தீபம் மிகச் சிறப்பான பணி ஒன்றைச்செய்தது. மாநாட்டு நிகழ்ச்சிகளை விரிவாக வெளியிட்டதுடன், நல்ல ஆய்வுக் கட்டுரைகளின் சாராம்சத்தை தொடர்ந்து வெளியிட்டது. பத்திரிகை ஒரு புனித இயக்கம் என்று நா.பா. அடிக்கடி வலியுறுத்தி வந்தார். இலக்கியப் பத்திரிகை என்ற தன்மையில் இலக்கிய உலகம் பற்றி தீபம் பல்வேறு கோணங்களிலும் கூரிய பார்வையை செலுத்தி ஆழ்ந்த கருத்துக்களை வெளியிட்டு, இலக்கிய வாதிகளை சிந்திக்கவும் செயல்படவும் தூண்டியது. நாட்டுப் பற்றையும் மொழிப்பற்றையும், சமூக விழிப்பு உணர்வையும் வளர்த்தது தீபம். - ஆண்டு தோறும் ஆகஸ்டில் சுதந்திர தினம் பற்றியும், செப்டம்பரில் பாரதி விழா குறித்தும், அக்டோபரில் காந்திஜி பற்றியும் வித்தியாசமான - ஒவ்வொரு வருடமும் புதிய சிந்தன்ை ஒளியுடன் - தலையங்கம் வரைந்து, ஊன்றி உணர்தற்குரிய உண்மைகளை எடுத்துரைத்தார்.நா.பா. - எழுத்தாளர்களுக்கு இலக்கிய உணர்வோடு, சமூகப் பிரக்ஞையும், தமிழ் நாட்டுப் பற்றும் விசால இந்திய உணர்வும்,