பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

( வல்லிக்கண்ணன் ) - G5) தொடக்க காலத்திலிருந்தே அவர் கனவாக இருந்திருக்க வேண்டும். அதனால் தான் அவரது ஆரம்பகாலப் பாத்திரமான குறிஞ்சி மலர் பூரணியை அவர் ஈடிணையில்லாத பேச்சாளராகப் படைத்திருக்கிறார் என்று தோன்றுகிறது. மெல்ல மெல்ல உயர்தரப் பேச்சாளராக உருவான நா.பா. பேசுகிறார் என்று அழைப்பிதழில் அச்சிட்டால் அவர் பேச்சைக் கேட்கவென்றே பெருங்கூட்டம் கூடத் தொடங்கியது. பிரமுகர்கள் பலரும் நா.பா. பேச்சின் ரசிகர்களாக இருந்தார்கள். முக்கியமாக பெருந்தலைவர் காமராஜ் நா.பா. பேச்சை விரும்பி ரசித்தார். தமக்கு ஆதரவாக முன்வைக்கும் தர்க்கரீதியான நா.பா.வின் வாதங்களை காமராஜ் கேட்டு வியந்து மகிழ்வதுண்டு. - நா.பா.வின் குரலில் ஒரு தனி இனிமையும் கம்பீரமும் இருந்தன. ஆலய மணிக்குரல் அது. கண்ணதாசனுக்கும் அத்தகைய குரலினிமை இருந்தது. கண்ணதாசன் தம் இனிய குரலால் மேடையில் பாடவும் பாடுவாள். நா.பா. பாட மாட்டார். ஆனாலும் அவர் பேச்சே ஒரு சங்கீதம் போல் தான் இருக்கும். கருத்தாக மட்டுமல்லாமல் வெறும் குரலுக்காகவே கூட அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கலாம் போல் தோன்றும். உச்சரிப்பைப் பொறுத்தவரை கி.வா.ஜகந்நாதன், அ. ச. ஞானசம்பந்தன் போன்றோரைப் போல பிசிரற்ற திருத்தமான உச்சரிப்புடைய மிகச் சிலரில் ஒருவர் அவர் ஒரு சொல்லை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதற்கு அவரிடம் தான் பாடம் கேட்க வேண்டும். எழுத்து, பேச்சு இரண்டையுமே அவர் தமது இரு கண்களாகக் கொண்டிருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். சிறப்பாக எழுதும் பல எழுத்தாளர்களுக்குப் பேச வருவ தில்லை. சில எழுத்தாளர்கள் அதிகம் புகழடையாததற்கு அவர்களுக்குப் பேச்சாற்றல் இல்லாதிருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். பேசும்போது தான் வாசகர்களை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டுகிறது. இதனால் ஓர் எழுத்தாளரின், வாசக தளம் மிக்ச் சுலபமாக விரிவடைகிறது. எழுத்தாளர் களுக்கும் வாசகர்களுக்கும் இடையேயான நட்புறவு மேலும் நெருக்கமாகிறது. * - நா.பா. மிக நல்ல மேடைப் பேச்சாளர் மட்டுமல்ல, மிகச் சிறப்பாக உரையாடக் கூடியவரும் கூட. பல கூட்டங்களில்