பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- எழுத்து உலகின் நட்சத்திரம் "தீபம்' நா. பார்த்தசாரதி) நா.பாவுக்கு நேரம் கிட்டியதே இல்லை. எழுத்தில் எழுதாத பல விஷயங்களை அவர் நயம்படப் பேச்சில் தெரிவித்து வந்தார். என்றாலும் அவர் பேச்செல்லாம் எழுத்தாய்ப் பதிவாகாமல் காற்றோடு தான் போயிற்று. அவரது சொற்பொழிவைக் கேட்பவர்கள் அவர் பேச்சில் ஒரு முழுமையை உணர்வார்கள். தாம் எழுதும் சிறுகதை மாதிரி ஒர் எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என வகுத்துக் கொண்டு ஒரு மணி நேரம், ஒன்றரை மணி நேரம் என அவர் பேசிவந்தார். பேச்சின் இறுதியில் அதுவரை என்னென்ன பேசினோம் என்பதை அவர் தொகுத்துச் சொல்வதும் உண்டு. குற்றாலக் குறவஞ்சி, முக்கூடற் பள்ளு, நந்திக் கலம்பகம், பாரதி கவிதை என இடைக்கால, தற்கால இலக்கியங்கள் குறித்து இன்னும் சற்றுப். பேசமாட்டாரா என்று ஆவல் தோன்றும் வகையில் அவர் பேசுவார். தவிர சிலப்பதிகாரம், திருக்குறள், கம்பராமாயணம் போன்ற பழைய இலக்கியங்கள் குறித்தும் பேசுவது உண்டு. இலக்கணத்தைப் பற்றிக்கூடக் கேட்பார் ரசிக்கும் வகையில் சுவாரஸ்யமாக அவரால் பேச இயலும். ஒரிரு பட்டிமன்றங் களில் எப்போதோ அவர் நடுவராகக் கலந்து கொண்டாலும், பொதுவாக அவர் பட்டிமன்றங்களில் பேசியதில்லை. அவர் காலத்திலேயே பட்டிமன்றங்கள் மிகவும் தரம் தாழ்ந்துவிட்டன என்பது அவர் கருத்தாக இருந்தது. நிறையப் புத்தக வெளியீட்டு விழாக்களிலும் அவர் கலந்துகொண்டு பேசியிருக்கிறார். வெறுமே சம்பிரதாயமாகப் பாராட்டாமலும் அதே நேரத்தில் குற்றங் குறைகளை மட்டுமே கூறித்தாக்காமலும் குணம் நாடிக் குற்றமும் நாடி சமச்சீராக அவர் உரையாற்றுவார். ... . . அவர் பேச்செங்கும் ஒரு மெல்லிய நகைச்சுவை இழையோடிக் கொண்டே இருக்கும். முகத்தில் ஒரு சின்ன முறுவலாவது வராமல் அவர் பேச்சைக் கேட்க முடியாது. கடினமான புழக்கத்தில் இல்லாத சொற்களை அவர்தம் பேச்சில் உபயோகிப்பதில்லை. அவர் எழுத்தைப் போலவே அவர் பேச்சும் செயற்கைத் தன்மை ஏதுமில்லாமல் இயல்பாக இருக்கும். + . - சிறந்த எழுத்தாளராக ஆக வேண்டும் என்பதோடு கூட சிறந்த பேச்சாளராக ஆக வேண்டும் என்பதும் நா.பா.வின்