பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

( வல்லிக்கண்ணன் } - —C33 } அத்தகைய அடைமொழிகளைச் சேர்த்துச் சொல்லவோ எழுதவோ மாட்டார். & - நா.பா. குமுதத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். இப்படி நான் பேசிய வாக்கியம் இப்படி அச்சாகியிருக்கிறது என்பதாக அந்தக் கடித்த்தில் எழுதப்பட்டிருந்தது. குமுதம் உடனடியாக நா.பா.வின் கடிதத்தைப் பிரசுரித்தது. மேலோட்டமாகப் பார்க்கிறவர்களுக்கு இரண்டு வாக்கியங்களும் ஒன்றாகத் தானே இருக்கின்றன என்றுதான் தோன்றும். நுணுக்கமாக வாசிப் பவர்கள் வித்தியாசத்தைப் புரிந்துகொள்வார்கள். அதையொட்டி குமுதத்தில் பல வாரங்கள் சர்ச்சை நிகழ்ந்தது. பலர் எதிர்வாதங்களை முன்வைத்தார்கள். ஆனால் நா.பா. தன்நிலைப்பாட்டை இறுதிவரை மாற்றிக் கொள்ளவே இல்லை. இலக்கிய அறிவைப் பொறுத்தவரை அண்ணா துரையை விடக் கருணாநிதி கூடுதலாக அறிந்தவர் என்பது நா.பாவின் கருத்தாக இருந்தது. எனினும் திராவிடக் கட்சிகளை எதிர்த்த நா.பா. கருணாநிதியை மேடைகளில் காட்டமாக எதிர்க்கவும் தயங்கியதில்லை. சத்தியவெள்ளம் நாவலே திராவிடக் கட்சிகளை எதிர்த்து காமராஜை ஆதரித்துத் தான் எழுதப்பட்டது. அந்த நாவலில் காமராஜ், ராமராஜ் என்ற பெயரில் ஒரு பாத்திரமாக வருகிறார். தம்மை நா.பா. எதிர்த்த போதும் கருணாநிதி நா.பா.வின் இலக்கிய ஆற்றலை மதிக்க மறந்ததில்லை. ... - - ஆனந்தவிகடன் நடத்திய சரித்திர நாவல் போட்டியில் நா.பா., அகிலன், கருணாநிதி ஆகிய மூவரும் நீதிபதிகளாக இருந்தார்கள். இலக்கிய அளவில் இந்த மூவரும் ஒருமனதாக மு.மேத்தாவின் சோழநிலா நாவலுக்கு முதல் பரிசு வழங்கினார்கள். - - நா.பா.வின் அரசியல் பேச்சு இடி முழங்குவது போல் இருக்கும் என்றால் இலக்கியப் பேச்சு ஜிலுஜிலுவென்று தென்றல் வீசுவதுபோல் இருக்கும். மறைந்த எழத்தாளர் கு.அழகிரிசாமியைப் பற்றி இலக்கியச் சிந்தனைக் கூட்ட மொன்றில் நா.பா. பேசினார். அந்தப் பேச்சைக் கேட்டு வியந்த இலக்கியச் சிந்தன்ை பாரதி, நா.பா. தம் பேச்சை அப்படியே புத்தகமாக எழுத வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால் தம் எந்தப் பேச்சையும் பிறகு எழுத்தில் வடிக்க