பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(ਫ੍ਰੀ-( எழுத்து உலகின் நட்சத்திரம்'தீபம்' நா. பார்த்தசாரதி D நா.பா. பேச்சின் முக்கியமான சிறப்பம்சம் அவரது அபாரத் துணிச்சல். அவர் சொல்லும் கருத்தை ஏற்காதவர்கள் கூட அவரது துணிச்சலை வியக்காமல் இருக்க மாட்டார்கள். யாரைப் பற்றியும் லட்சியம் செய்யாது எதிர்விளைவுகளைப் பற்றிக்கவலைப்படாதுதம் மனச்சாட்சியையே அளவுகோலாகக் கொண்டு அவர் தம் கருத்துகளை வெட்டொன்று துண்டி ரண்டாகக் கூறி வந்தார். பாரபட்சம் காட்டுவது, சமரசம் செய்து கொள்வது, ஒன்றைச் சொல்லிவிட்டுப் பின்னர் நான் அப்படிச் சொல்லவே இல்லையே என்று மறுப்பது, சொல்லத் தயங்கி ஓர் அபிப்ராயத்தை மேம்போக்காக மழுப்பிச்சொல்வது போன்றவை அவர் அகராதியிலே கிடையாது. - r இலக்கியப் பேச்சுகளில் மட்டுமல்லாமல் அவரது ஸ்தாபன காங்கிரஸ் சார்ந்த அரசியல் பேச்சுகளிலும் இதே பாணியைத்தான்.அவர் இறுதிவரை பின்பற்றி வந்தார். கருத்தைச் சொல்லும் போது மற்றவர்கள் என்ன நினைத்துக் கொள்வார்களோ என்ற கவலை அவரிடம் இருந்ததே இல்லை. த்ம் கருத்து பொதுக்கருத்துக்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தாக இருந்தாலும் அதை உரத்துச் சொல்ல அவர் பின் வாங்கிய 'அக்கிரகாரத்தில் பிறந்த அதிசயப் பிறவி என்று வ.ரா.பற்றி அண்ணாதுரை குறிப்பிட்டார். இதை மேற்கோள் காட்டிப் பேசிய நா.பா. அடுக்குமொழி அலங்காரத்தால் மோனை நயத்திற்காக அண்ணாதுரை.அப்படிக் குறிப்பிட்டாரே தவிர வ.ரா.வின் எல்லாப் பெருமைகளையும் அண்ணாதுரை உணர்ந்திருந்தார் என்று நான் சொல்ல மாட்டேன். அறிஞர்களை அவர்கள் ஜாதியைச் சார்ந்து அதிசயப்பட வேண்டிய அவசியம் இல்லை. எல்லாஜாதியிலும்அதிசயமானவர்கள் பிறப்பதுண்டு. எதிலும் ஜாதியைக் காண்பது தேவையற்றது என்று மேடையில் பேசினார். இதைக் குமுதம் இதழில் ஒரு துணுக்காக எழுதியிருந்தார் மகரம். அதில் அண்ணாதுரை என்று வரும் இடங்களில் அறிஞர் அண்ணாதுரை என்று நா.பா. சொன்னது. போல் எழுதப்பட்டிருந்தது. அது மகரத்தின் பெரிய தவறு என்றும் சொல்ல இயலாது. வழக்கத்தில் அண்ணாதுரை என்று சொல்லும் போது அறிஞர் அண்ணாதுரை என்று சொல்வது இயல்பாக ஆகியிருந்தது. ஆனால் நா.பா. ஒரு போதும்