பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| வல்லிக்கண்ணன் H {39) சாலை - நந்தனம் சந்திப்பில் வழக்கமான வெற்றிலை பாக்குக் கடையில் நா.பா.வுக்கான செய்தித்தாள்கள் காத்திருக்கும். ஐந்து மணி ஆகிவிட்டால் பேப்பர் கிடைக்காது. வந்த சூட்டில் பறந்து விடும் என்பார். ஒரு மூன்றுநிமிடம் கூட அதில் நேரம் போகாது. மேலோட்டமாகவே பார்த்து மடக்கி வைத்துக் கொள்வார். சுப்ர. பாலன் இது முக்கியமாவிட்டிலே இருக்கறவங்க - பார்க்கணும்னே வாங்கறேன். அங்கே கொள்ளை, இங்கே ஏமாற்று வேலை, திருட்டு எல்லாம் வரதே. படிச்சுட்டு வீட்டிலே இருக்கிறவங்க எச்சரிக்கையா இருக்கணும்" என்பார். ஆன்ால் அவர்கள் விரும்பிப்படிப்பதென்னவோ சினிமாச் செய்திகளாய்த்தானிருக்கும் என்றும் சொல்லி வருத்தப்படுவார். நா.பா. என்கிற கவர்ச்சியான பிரமுகரோடு எனக்கு முதன் முதலாக அறிமுகம் ஏற்பட்டது 1958ம் ஆண்டில். எனக்கு அப்போது பத்தொன்பது வயது நிறையவில்லை. அரசாங்க அலுவலகத்தில் வேலை கிடைத்தது. மதுரை- அருப்புக் கோட்டை வழியில் ஜோகில்பட்டி என்கிற சிறிய கிராமத்திலிருந்த அரசாங்கப் பள்ளிக் கூடம் அது. சொந்த ஊர் புதுக்கோட்டையிலிருந்து மதுரை வழியே தான் ஜோகில் பட்டிக்குப் போக வேண்டும். - அப்போது கல்கியில் ' பாண்டிமாதேவி தொடராக வந்த காலம். அதற்கு முன்பே, கல்கி நடத்திய் மாதச்சிறுகதைப் போட்டியொன்றில், நா.பா.எழுதிய வலம்புரிச்சங்கு என்கிற அற்புதமான சிறுகதை நூறு ரூபாய்ப் பரிசுப் பெற்றதாய் - வெளியாகியிருந்தது. அதை விடச் சிறப்பான மனிதாபிமானச் சிறுகதையை இன்று வரை கூட யாரும் எழுதி விடவில்லை என்பது என்கணிப்பு. • . . . . .” பத்தொன்பது வயது இளைஞனாய் நான் நா.பா. என்கிற கம்பீரத்தைச் சந்தித்த போது அவர் மதுரை பழங்காநத்தத்தில் திருப்பரங்குன்றம் சாலையில் ஒரு வீட்டில குடியிருந்தார். சிறுவனாக அங்கே அப்போது இருந்தவர்தான் பின்னால் தீபம் இதழை நிர்வகித்த 'தீபம் திருமலை, * - ヘ அந்த முதல் சந்திப்பின் போது எனக்கு அன்பளிப்பாகக் கையெழுத்திட்டுத்தந்த நூல்'வலம்புரிச்சங்குகதைத் தொகுதி. அதன் பிறகு அடிக்கடி கடிதம் எழுதுவேன். ஒவ்வொரு