பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து உலகின் நட்சத்திரம் "தீபம்' நா. பார்த்தசாரதி) வெகுவேகமாகக் காரை ஒட்டுவதில் நிபுணர்நா.பா. சாலையில் பார்வையை ஒடவிட்ட வாறே நம்மிடம் பேசிக் கொண்டும் வருவார். - . . . . அவருக்கு சைக்கிள்காரர்கள் மீது தான் எச்சரிக்கை அதிகம். எந்த நேரத்தில், எங்கே அவர்கள் திரும்புவார்கள் என்பது தெரியாது. நான் எப்போதும் எத்தனை தொலைவானாலும் சைக்கிளிலேயே சென்னையை அளந்தவன். எனவே, காரின் குறுக்கே சைக்கிள் ஏதாவது வந்துவிட்டால், பிரேக் பிடித்துச் சமாளித்து விடுவார். அவனைத் திட்டமாட்டார். சிரித்துக் கொண்டே என்னைப் பார்த்து 'பாத்திங்களா? உங்க ஆளுங்கதான் பிரச்சனையே’ என்டார். உங்க' என்பது என்னையும் சேர்த்துச்சைக்கிள் வாலாக்களைத்தான். - எனக்கும் கொஞ்சம் வருத்தமாகவும் இருக்கும். ஒன்றி ரண்டு முறை வண்டியை 'கராஜில் விட்டிருந்த நேரங்களில் அவசரம் கருதி என் சைக்கிளிலும் கேரியரில் அமர்ந்து சிறு தொலைவு அவர் பயணம் சென்றதுண்டு. 'இந்த எம்ஜியார் பண்ணின புண்ணிய காரியத்தை நாம் அனுபவிப்போம்: என்று சொல்லிக் கொண்டே சைக்கிளில் அமர்ந்து கொள்வார். முதலமைச்சராக எம்.ஜி.ஆர். இருந்த போது தான் சைக்கிள்களில் இருவர் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. காவல் துறையினர் இந்த டபிள்ஸ் வழக்குகள் போட்டுப் போட்டுச் சோர்ந்து போயிருப்பார்கள். . அனேகமாக தினமுமே மாலை நேரங்களிலோ, காலையிலோ நான் அவரைச்சந்திப்பது உண்டு. அலுவலகத்தில் நேரமாகி விட்டால் தான் முடியாமல் போகும். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் மாலை ஐந்து மணிக்கே என் வருகைக்குக் காத்திருப்பார். நிகழ்ச்சிகள் இருந்தால் அதற்குப் போய் விடுவோம். இல்லாவிட்டால் துணைக்கு செல்ல நாய் nஸரையும் அழைத்துக் கொண்டு நாங்கள் செல்கிற இடம் நந்தனம் ஒய்.எம்.ஸி.ஏ. வளாகப் புல்வெளிக்குத்தான். அங்கே பல மாலை நேரங்களைக் கழித்திருக்கிறோம். இரவு ஏழுமணி வாக்கில் திரும்புவோம். . * . . மாலைஐந்து மணி என்றால்-எங்கேயிருந்தாலும் மாலை முரசு வாங்கிப் பர்ர்த்தாக வேண்டும் அவருக்கு. உஸ்மான்,