பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| வல்லிக்கண்ணன் H - - { 53D மவுண்ட் ரோடிலிருந்து திருவல்லிக்கேணி செல்லும் வாலாஜா சாலை அருகிலேயே உள்ள சிறிய சந்துதான் நல்லதம்பி செட்டித் தெரு. நா.பா. அலுவலகத்திற்கு இன்னும் வந்திருக்கவில்லை. ஒரு பெரியவர் இருந்தார். அவர் நா.பா.வின் சிறிய மாமனாார் என்பதைப் பிறகு அறிந்து கொண்டேன். ஆசிரியப் பணிபுரிந்து ஒய்வு பெற்ற அவர்,ராயபுரம் பகுதியிலிருந்து வருவார். கணக்கு எழுதுவது, நா.பா.வுக்காகவும் 'தீபம்’ இதழுக்காகவுமான ஆங்கிலக் கடிதங்களை டிக்டேட் செய்து மேனேஜர் டைப் செய்ததும் சரிபார்ப்பது போன்ற பணிகளை இவர் செய்வார். நாராயண அய்யங்கார் என்று பெயர். அவரிடமும் தீபம் மேனேஜர் எஸ்.திருமலையிடமும் நான் வந்த விவரம் கூறினேன். சிறிது நேரம் கழித்து வரச் சொன்னார்கள். அவ்வாறே சிறிது நேரம் கழித்து மறுபடியும் அங்கு சென்றேன். நா.பா. இருந்தார். அவருடைய அறையில் ஒரு பெரியவர் இருந்தார். நா.பா. அந்தப் பெரியவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர்-வல்லிக்கண்ணன்! அன்று எனக்குநா.பா. முதல்தரிசனமும. வல்லிக்கண்ணன் தரிசனமும் கிடைத்தது. நான் நா.பா.வின் நாவல்களை ரசித்த விவரங்களை மூச்சுவிடாமல் விவரித்துக் கொண்டிருந்தேன். அவர் என்னையே அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார். அது ஒரு நயன தீட்சைபோலிருந்தது. நீங்கள் நா.பா.வின் 'மணிபல்லவம்’ நாவலைப் படித்திருக்க வேண்டும். அதில் வரும் மகான்-நாங்கூர் அடிகள் பாத்திரம் என் மனத்தில் ஆழப் பதிந்திருந்தது. அந்த நாங்கூர் அடிகளாகவே நான் அப்போது நா.பா.வைப் பார்த்தேன். அவர் என்ன வேலை பார்க்கிறாய்...? என்று கேட்டார். பதினாறு அல்லது பதினேழு வயதுப் பையன் நான். பசி, பட்டினியால் காய்ந்து போய்க் கிடந்தேன். அலைந்து திரிந்து களைத்துப் போயிருந்தேன். பார்த்த மாத்திரத்தில் என் மீது இரக்கம் சுரந்திருக்க வேண்டும் அந்தப் பெருந்தகைக்கு. சொல்லிக் கொள்ளும் படியான ஒரு வேலையுமில்லை நான் பார்த்தது.