பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து உலகின் நட்சத்திரம்'தீபம் நா. பார்த்தசாரதி) பணிபுரிவேன். டி.பனும் சாப்பிடலாம். எட்டனா காசை வாங்கிக் கொண்டு வெளியே வந்து விடலாம். அங்குநிரந்தரப் பணியாளர்களை விட, இப்படி பகுதி நேரம் வந்து செல்பவர்களுக்கே வாய்ப்பு அதிகம். கையில் காசு கிடைத்தவுடன் நேரே மண்ணடி சென்று, நா.பா.நூல் ஒன்றை எடுத்துக் கொண்டு லோன்ஸ்குயர்பார்க்கில் வந்து உட்கார்ந்து விடுவேன். ஒரே மூச்சில் கதை முழுக்கப் படித்துவிட்டுதான் வேறு வேலைப் பார்ப்பேன். கல்கியில் நா.பா. வின் கதைகள் வெளிவந்த போது, சில அற்புதமான வர்ணனைகளைப் பொன் மொழிகள் மாதிரி கட்டம் கட்டி, கதை நடுவே வெளியிட்டிருப்பர். அவற்றை நான் மிகவும் ரசித்து, கையில் கிடைக் கிற தாள்களில் எழுதி வைப்பேன். நண்பர்கள் வட்டத்தில் சில மலையாளிகள் இருந்தனர். அவர்கள் நல்ல படிப்பாளிகள் கையில் எப்போதும் மலையாளப் புத்தகங்கள் அல்லது ஆங்கில நூல்கள் மட்டுமே வைத்திருப்பர். பல நூல்களை, எழுத்தாளர்களைப் பற்றி மிகவும் சிலாகித்த படி இருப்பர். தமிழ்க் கதைகள் படிக்கிற ஆசாமிகளை அவர்கள் சற்று இளப்பமாகவே பார்ப்பது வழக்கம். நான் அவர்களிடம் நா.பா.வின் கதை நடுவே இடம்பெற்ற பொன்மொழி போன்ற வாசகங்களைக் குறித்து வைத்திருப்பதை மேற்கோள் காட்டிப் பேசுவேன். அதைக் கேட்டு அவர்கள் வியந்து போனதுண்டு. நா.பா. 'தீபம் இதழை நடத்தும் விவரம் அப்போது எனக்குத் தெரியாது. நா.பா.தான் மணிவண்ணன் என்கிற பெயரில் எழுதுபவர் என்பதும் தெரியாது. சோமு என்கிற ஒரு நண்பன் 'தீபம்’ இதழைக் கொண்டு வந்து காட்டினான். உடனே அதில் கண்ட 6, நல்ல தம்பி செட்டித் தெரு என்கிற முகவரிக்கு ஒரு தபால் எழுதினேன். உடனே நா.பா. ஒரு தபால் கார்டில், மணி மணியான எழுத்துகளில், முத்துச் சரம் கோர்த்தாற்போல் பதில் எழுதியிருந்தார். வந்து சந்திக்குமாறும் அழைப்பு விடுத்திருந்தார். - உடனே அதை எடுத்துக் கொண்டு நடந்தே மவுண்ட்ரோடு வந்து, அந்த முகவரியைத் தேடினேன்.ரொம்பவே அலைந்து திரிந்த பின்னர் தான் கண்டுபிடிக்க முடிந்தது. இத்தனைக்கும்